• May 20 2024

மனிதப்பாவனைக்கு உதவாத 6 ஆயிரம் கிலோ பழப்புளி – அதிர்ச்சியடைந்த சுகாதார பரிசோதகர்கள் samugammedia

Chithra / May 8th 2023, 6:42 pm
image

Advertisement

அனுராதபுர மாவட்டத்தில் மனித பாவனைக்கு உதவாத சுமார் 6 ஆயிரம் கிலோக்கிராம் பழப்புளியினை கெக்கிராவ பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.

கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த புளிகள் 20 கிரோக்கிராம் வீதம் பொதி செய்ப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெக்கிராவ வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நகரிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீடொன்றில் பதப்படுத்தப்பட்ட நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாகவும் எனினும் அவை மனித பாவனைக்கு உகந்தது அல்ல என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த புளியின் மாதிரிகளை எடுத்த பின்னர், சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தகரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி, குறித்த வர்த்தகருக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குறித்த புளி கையிருப்புடன் நாளை (09) கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

மனிதப்பாவனைக்கு உதவாத 6 ஆயிரம் கிலோ பழப்புளி – அதிர்ச்சியடைந்த சுகாதார பரிசோதகர்கள் samugammedia அனுராதபுர மாவட்டத்தில் மனித பாவனைக்கு உதவாத சுமார் 6 ஆயிரம் கிலோக்கிராம் பழப்புளியினை கெக்கிராவ பொதுச் சுகாதார பரிசோதகர்கள் கைப்பற்றியுள்ளனர்.கெக்கிராவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் இந்த புளிகள் 20 கிரோக்கிராம் வீதம் பொதி செய்ப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கெக்கிராவ வைத்திய அதிகாரிக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.நகரிலுள்ள பிரபல வர்த்தகர் ஒருவரின் வீடொன்றில் பதப்படுத்தப்பட்ட நிலையில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தாகவும் எனினும் அவை மனித பாவனைக்கு உகந்தது அல்ல என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குறித்த புளியின் மாதிரிகளை எடுத்த பின்னர், சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்ட வர்த்தகரிடம் வாக்குமூலங்களை பதிவு செய்வதற்கும் பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.இதன்படி, குறித்த வர்த்தகருக்கு எதிராக உணவு சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, குறித்த புளி கையிருப்புடன் நாளை (09) கெக்கிராவ மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement