• Feb 22 2025

6000 ரூபாய் கல்வி வவுச்சர் மோசடி;மாணவர்களின் உரிமையைப் பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம்- றஜீவன் எம்.பி சுட்டிக்காட்டு..!

Sharmi / Feb 21st 2025, 5:45 pm
image

கல்வி அமைச்சு ஏழை மாணவர்களுக்கு வழங்கிய 6000 ரூபாய் பெறுமதியான கல்வி வவுச்சர் திட்டத்தை சில வர்த்தக நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இது மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரான பெரிய குற்றமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாணவர்களுக்கு தேவையான பொருட்களுக்கு பதிலாக, தேவையற்ற பொருட்களை விற்பனை செய்ய முயற்சி, வவுச்சர் மூலம் வாங்கும் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து, கூடுதல் பணம் செலுத்துமாறு வற்புறுத்தல், சில பொருட்களுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே வழங்குவதாக கோரிக்கை, விற்கப்படாமல் இருந்த பழைய பொருட்களையும் விற்பனை செய்ய முயற்சி போன்ற விடயங்கள் தொடர்பாக பெற்றோரால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டது. 

இது தொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் .

சரியான, நம்பகமான வர்த்தக நிறுவனங்களில் மட்டுமே வவுச்சரை பயன்படுத்த வேண்டும் எனவும் விலை அதிகமாக விற்பனை செய்யும் கடைகளை புறக்கணிக்க வேண்டியதுடன், மோசடிகளை உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் "அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை வேண்டும். ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை முழுமையாக பெறச்செய்யுங்கள். இல்லை என்றால் கடவுளும் மன்னிக்க மாட்டார். முறைகேடுகளை அனுமதிக்காமல், உண்மையான வர்த்தகர்களை நாடி, உங்கள் உரிமையை பாதுகாக்குங்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.

6000 ரூபாய் கல்வி வவுச்சர் மோசடி;மாணவர்களின் உரிமையைப் பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம்- றஜீவன் எம்.பி சுட்டிக்காட்டு. கல்வி அமைச்சு ஏழை மாணவர்களுக்கு வழங்கிய 6000 ரூபாய் பெறுமதியான கல்வி வவுச்சர் திட்டத்தை சில வர்த்தக நிறுவனங்கள் துஷ்பிரயோகம் செய்யும் சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி தெரிவித்துள்ளார்.இது மாணவர்களின் கல்வி உரிமைக்கு எதிரான பெரிய குற்றமாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மாணவர்களுக்கு தேவையான பொருட்களுக்கு பதிலாக, தேவையற்ற பொருட்களை விற்பனை செய்ய முயற்சி, வவுச்சர் மூலம் வாங்கும் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்து, கூடுதல் பணம் செலுத்துமாறு வற்புறுத்தல், சில பொருட்களுக்கு பணம் செலுத்தினால் மட்டுமே வழங்குவதாக கோரிக்கை, விற்கப்படாமல் இருந்த பழைய பொருட்களையும் விற்பனை செய்ய முயற்சி போன்ற விடயங்கள் தொடர்பாக பெற்றோரால் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக மாணவர்களும் பெற்றோர்களும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் .சரியான, நம்பகமான வர்த்தக நிறுவனங்களில் மட்டுமே வவுச்சரை பயன்படுத்த வேண்டும் எனவும் விலை அதிகமாக விற்பனை செய்யும் கடைகளை புறக்கணிக்க வேண்டியதுடன், மோசடிகளை உடனடியாக அதிகாரிகளிடம் புகார் அளிக்க வேண்டும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். மேலும் "அனைவருக்கும் உதவி செய்யும் மனப்பான்மை வேண்டும். ஏழை மாணவர்களுக்கு வழங்கப்படும் உதவிகளை முழுமையாக பெறச்செய்யுங்கள். இல்லை என்றால் கடவுளும் மன்னிக்க மாட்டார். முறைகேடுகளை அனுமதிக்காமல், உண்மையான வர்த்தகர்களை நாடி, உங்கள் உரிமையை பாதுகாக்குங்கள் எனவும் கேட்டுக் கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement