• Feb 22 2025

மட்டக்களப்பில் இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரை தாக்கியோர் கைது..!

Sharmi / Feb 21st 2025, 5:36 pm
image

இ.போ.ச பேருந்தொன்றில் பயணித்த யுவதி ஒருவரை குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடாத்துநர் கேலி செய்ததாக பேருந்தை  நிறுத்தி சாரதி நடத்துநர் மீது தாக்குதல் நடாத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் நேற்றையதினம்(20) இரவு மட்டக்களப்பு புல்லுமலை  பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்

பதுளையில் இருந்து புல்லுமலை ஊடாக  மட்டக்களப்புக்கு இடையிலான போக்குவத்தில் ஈடுபட்டுவரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த  புல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை சம்பவ தினமான நேற்றையதினம் கேலி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதி உறவினரிடம் தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து குறித்த பேருந்து  மட்டக்களப்பில் இருந்து பதுளை நோக்கி மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்து சேவையில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த பேருந்தை புல்லுமலை பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி பிரயாணிகளை ஏற்றிக் கொண்ட நிலையில் அங்கு காத்திருந்த இருவர் சாரதி நடத்துநருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதலை நடாத்தினர்

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தாக்குதலை மேற்கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்யுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்ட இருவரையம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மட்டக்களப்பில் இ.போ.ச பேருந்தின் சாரதி மற்றும் நடத்துநரை தாக்கியோர் கைது. இ.போ.ச பேருந்தொன்றில் பயணித்த யுவதி ஒருவரை குறித்த பேருந்தின் சாரதி மற்றும் நடாத்துநர் கேலி செய்ததாக பேருந்தை  நிறுத்தி சாரதி நடத்துநர் மீது தாக்குதல் நடாத்திய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச் சம்பவம் நேற்றையதினம்(20) இரவு மட்டக்களப்பு புல்லுமலை  பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்பதுளையில் இருந்து புல்லுமலை ஊடாக  மட்டக்களப்புக்கு இடையிலான போக்குவரத்தில் ஈடுபட்டுவரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் பயணித்த  புல்லுமலை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை சம்பவ தினமான நேற்றையதினம் கேலி செய்துள்ளதாக பாதிக்கப்பட்ட யுவதி உறவினரிடம் தெரிவித்துள்ளார்.இதனை தொடர்ந்து குறித்த பேருந்து  மட்டக்களப்பில் இருந்து பதுளை நோக்கி மாலை 5.30 மணிக்கு ஆரம்பித்து சேவையில் ஈடுபட்டிருந்தபோது, குறித்த பேருந்தை புல்லுமலை பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடத்தில் நிறுத்தி பிரயாணிகளை ஏற்றிக் கொண்ட நிலையில் அங்கு காத்திருந்த இருவர் சாரதி நடத்துநருடன் வாய்த் தர்க்கத்தில் ஈடுபட்டதை தொடர்ந்து அவர்கள் மீது தாக்குதலை நடாத்தினர்இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் தாக்குதலை மேற்கொண்ட அந்த பகுதியைச் சேர்ந்த இருவரை கைது செய்யுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதுஇதில் கைது செய்யப்பட்ட இருவரையம் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கரடியனாறு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement