• Nov 30 2024

'யுக்திய' நடவடிக்கையில் 697 சந்தேக நபர்கள் கைது...!

Sharmi / Feb 22nd 2024, 10:03 am
image

நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கையில் 697 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 138 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 697 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 170 கிராம் 224 மில்லி கிராம் ஹெராயின், பனி 113 கிராம் 351 மி.கி, கஞ்சா 814 கிராம் 21 மி.கி, மாவா 55 கிராம், துலே 65 கிராம், மதன மோதக 432 கிராம், சாம்பல் 3 கிராம் 522 மி.கி, 137 மாத்திரைகள், 26,186 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேக நபர்களில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் 06 சந்தேகநபர்களும், புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட சந்தேக நபரொருவரும், அழைப்பாணையின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட 03  பேரும் அடங்குகின்றனர்.

மேலும், குற்றப்பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 138 சந்தேக நபர்களில் 12 சந்தேகநபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 106 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், குற்றங்களுக்காக தேடப்படும் 15 சந்தேக நபர்களும், 05 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


'யுக்திய' நடவடிக்கையில் 697 சந்தேக நபர்கள் கைது. நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் முன்னெடுக்கப்பட்ட பொலிஸாரின் 'யுக்திய' நடவடிக்கையில் 697 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுகளில் குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 138 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 697 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களிடமிருந்து 170 கிராம் 224 மில்லி கிராம் ஹெராயின், பனி 113 கிராம் 351 மி.கி, கஞ்சா 814 கிராம் 21 மி.கி, மாவா 55 கிராம், துலே 65 கிராம், மதன மோதக 432 கிராம், சாம்பல் 3 கிராம் 522 மி.கி, 137 மாத்திரைகள், 26,186 கஞ்சா செடிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 559 சந்தேக நபர்களில், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் 06 சந்தேகநபர்களும், புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்பட்ட சந்தேக நபரொருவரும், அழைப்பாணையின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்பட்ட 03  பேரும் அடங்குகின்றனர்.மேலும், குற்றப்பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் கைது செய்யப்பட்ட 138 சந்தேக நபர்களில் 12 சந்தேகநபர்களுக்கு போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், 106 போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளும், குற்றங்களுக்காக தேடப்படும் 15 சந்தேக நபர்களும், 05 சந்தேக நபர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement