• Nov 26 2024

அட்லாண்டிக் கடற்பகுதியில் மிகவும் மோசமான படகு விபத்து- 89 உடல்கள் மீட்பு 72 பேர் மாயம்!

Tamil nila / Jul 6th 2024, 8:15 am
image

அட்லாண்டிக் கடற்பகுதியில் அகதிகள் பயணம் செய்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த திங்கட்கிழமையன்று குறித்த படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்த 89 உடல்களை வடமேற்கு ஆபிரிக்க நாடான மாரிடேனியாவின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.

170 பேரை ஏற்றிக்கொண்டு செனகல் மற்றும் காம்பியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்தப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.

9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு, 72 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆபத்தான அட்லாண்டிக்கில் பலத்த காற்று மற்றும் அலைகளின் தாக்கத்தினால் குறித்த மீன்பிடி படகு கவிழ்ந்துள்ளது.

மேலும் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் அட்லாண்டிக் கடலில் நடந்த மிகவும் மோசமான அகதிகள் படகு விபத்து இது என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அட்லாண்டிக் கடற்பகுதியில் மிகவும் மோசமான படகு விபத்து- 89 உடல்கள் மீட்பு 72 பேர் மாயம் அட்லாண்டிக் கடற்பகுதியில் அகதிகள் பயணம் செய்த மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த திங்கட்கிழமையன்று குறித்த படகு கவிழ்ந்ததில் நடுக்கடலில் மிதந்துக் கொண்டிருந்த 89 உடல்களை வடமேற்கு ஆபிரிக்க நாடான மாரிடேனியாவின் கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.170 பேரை ஏற்றிக்கொண்டு செனகல் மற்றும் காம்பியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோதே இந்தப் படகு விபத்துக்குள்ளாகியுள்ளது.9 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதோடு, 72 பேரை காணவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.ஆபத்தான அட்லாண்டிக்கில் பலத்த காற்று மற்றும் அலைகளின் தாக்கத்தினால் குறித்த மீன்பிடி படகு கவிழ்ந்துள்ளது.மேலும் 2007ஆம் ஆண்டுக்குப் பின்னர் அட்லாண்டிக் கடலில் நடந்த மிகவும் மோசமான அகதிகள் படகு விபத்து இது என்றும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement