• May 12 2024

அதிபயங்கர நிலநடுக்கம் - துருக்கியிலிருந்த 9 இலங்கையர்கள் குறித்து வெளியான புதிய அறிவிப்பு

Chithra / Feb 6th 2023, 5:51 pm
image

Advertisement

துருக்கியிலுள்ள இலங்கையர்களில் ஒருவரே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என துருக்கியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 9 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களில் 8 பேரை இதுவரையில் தொடர்பு கொண்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் திருமதி ஹசந்தி உருகொடவத்த தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த 9 பேரில் ஒருவர் இடிந்து விழுந்த கட்டிடத்தில் வசித்து வந்திருந்ததாகவும், ஆனால் நில நடுக்கம் ஏற்படும் போது அங்கு இல்லை என துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.


நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதிர்பாராத வகையில் அதிகமாக உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 

ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள அதேவேளை  5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதிபயங்கர நிலநடுக்கம் - துருக்கியிலிருந்த 9 இலங்கையர்கள் குறித்து வெளியான புதிய அறிவிப்பு துருக்கியிலுள்ள இலங்கையர்களில் ஒருவரே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என துருக்கியிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.அத்துடன் நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் 9 இலங்கையர்கள் இருப்பதாகவும் அவர்களில் 8 பேரை இதுவரையில் தொடர்பு கொண்டுள்ளதாக துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் திருமதி ஹசந்தி உருகொடவத்த தெரிவித்துள்ளார்.எனினும் இந்த 9 பேரில் ஒருவர் இடிந்து விழுந்த கட்டிடத்தில் வசித்து வந்திருந்ததாகவும், ஆனால் நில நடுக்கம் ஏற்படும் போது அங்கு இல்லை என துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் தெரிவித்துள்ளார்.நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எதிர்பாராத வகையில் அதிகமாக உள்ளதாகவும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.இதேவேளை துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள அதேவேளை  5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement