• May 08 2024

திருமணம் செய்வதாக நாடகமாடிய 90ஸ் கிட்ஸ் வாலிபரிடம் 5லட்சத்தை சுருட்டிய பெண்....!samugammedia

Sharmi / May 16th 2023, 3:18 pm
image

Advertisement

திருமணம் செய்வதாக கூறி இளைஞரிடம் இருந்து 5 லட்சம்  ரூபாயை  பெண்ணொருவர் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சேலம் மாவட்டம், பி.என்.பாளையம், சின்ன மண்கொடு பகுதியை சேர்ந்த 27 வயதான பாலமுருகன் வேலை காரணமாக புதுவை சென்று தங்கியுள்ளார்.

இந்நிலையில், திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக, கடந்த பெப்ரவரி மாதம் திருமண இணையதளத்தில் பதிவு செய்து  2 நாட்களுக்கு பின் ஊர், பெயர் தெரியாத பெண் ஒருவர், பாலமுருகனை அவரது வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

அந்த பெண் தான் இந்தியஸ்ரீ ராதாகிருஷ்ணன் என்றும், கடலூரில் வசிப்பதாகவும், இணையதளத்தில் புகைப்படம், குடும்ப விவரங்களை பார்த்ததாகவும் பாலமுருகனை  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறி தனது புகைப்படம் மற்றும் குடும்ப விவரங்களையும் பாலமுருகனுக்கு அனுப்பியுள்ளார்.   

இதையடுத்து,பாலமுருகன் நம்பி பேச ஆரம்பித்த போது, தன்னுடைய வருமானம் ரூ.15 ஆயிரம் என கூறியுள்ளார்.

அந்த பெண், தான் கடலூரில் உதவி கலெக்டராக இருப்பதாகவும், ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் பாலமுருகனுக்கு நல்ல வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலையுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அத்தோடு அந்த வேலையை வாங்குவதற்கு ரூ.5 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூற அவற்றை  நம்பிய பாலமுருகன் அந்த பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4 ஆம் திகதி வரை ரூ.5 லட்சம் அனுப்பியுள்ளார்.

அதையடுத்து, அந்த பெண் பாலமுருகனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவரது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக  இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது தவறான முகவரி என்பது தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளார்.

இதுகுறித்து அவர் சைபர் கிரைம் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து,  பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமணம் செய்வதாக நாடகமாடிய 90ஸ் கிட்ஸ் வாலிபரிடம் 5லட்சத்தை சுருட்டிய பெண்.samugammedia திருமணம் செய்வதாக கூறி இளைஞரிடம் இருந்து 5 லட்சம்  ரூபாயை  பெண்ணொருவர் கொள்ளையடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  சேலம் மாவட்டம், பி.என்.பாளையம், சின்ன மண்கொடு பகுதியை சேர்ந்த 27 வயதான பாலமுருகன் வேலை காரணமாக புதுவை சென்று தங்கியுள்ளார். இந்நிலையில், திருமணத்திற்கு பெண் பார்ப்பதற்காக, கடந்த பெப்ரவரி மாதம் திருமண இணையதளத்தில் பதிவு செய்து  2 நாட்களுக்கு பின் ஊர், பெயர் தெரியாத பெண் ஒருவர், பாலமுருகனை அவரது வாட்ஸ்அப் எண் மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.அந்த பெண் தான் இந்தியஸ்ரீ ராதாகிருஷ்ணன் என்றும், கடலூரில் வசிப்பதாகவும், இணையதளத்தில் புகைப்படம், குடும்ப விவரங்களை பார்த்ததாகவும் பாலமுருகனை  திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருப்பதாகவும் கூறி தனது புகைப்படம் மற்றும் குடும்ப விவரங்களையும் பாலமுருகனுக்கு அனுப்பியுள்ளார்.   இதையடுத்து,பாலமுருகன் நம்பி பேச ஆரம்பித்த போது, தன்னுடைய வருமானம் ரூ.15 ஆயிரம் என கூறியுள்ளார். அந்த பெண், தான் கடலூரில் உதவி கலெக்டராக இருப்பதாகவும், ரூ.30 ஆயிரம் சம்பளம் வாங்குவதாகவும் பாலமுருகனுக்கு நல்ல வேலை இருந்தால் நன்றாக இருக்கும் என்று கூறியதுடன் கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் அரசு வேலையுள்ளதாகவும் கூறியுள்ளார். அத்தோடு அந்த வேலையை வாங்குவதற்கு ரூ.5 லட்சம் ரூபாய் வேண்டும் என்றும் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் கூற அவற்றை  நம்பிய பாலமுருகன் அந்த பெண்ணுக்கு ஆன்லைன் மூலம் பல கட்டங்களாக கடந்த 4 ஆம் திகதி வரை ரூ.5 லட்சம் அனுப்பியுள்ளார். அதையடுத்து, அந்த பெண் பாலமுருகனிடம் பேசுவதை நிறுத்திவிட்டு அவரது செல்போன் எண்ணையும் பிளாக் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக  இணையதளத்தில் குறிப்பிட்டிருந்த முகவரிக்கு சென்று பார்த்தபோது அது தவறான முகவரி என்பது தெரியவர அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து அவர் சைபர் கிரைம் பொலிஸில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து,  பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement