• May 04 2024

நாளாந்தம் சூழலுடன் கலக்கும் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக்: வெளியான அதிர்ச்சித் தகவல்! samugammedia

raguthees / Apr 9th 2023, 12:35 am
image

Advertisement

இலங்கையில் நாளாந்தம் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலப்பதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதில், 300.30 மெற்றிக் டன் பிளாஸ்ரிக் சேகரிக்கப்படுவதாகவும், 632.12 பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலில் விடப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

அவ்வாறு சூழலில் வீசப்படுகின்ற 419.47 மெற்றிக் டன் பிளாஸ்ரிக், எரிக்கப்படும் நிலையில், 38.48 மெற்றிக் டன் பிளாஸ்ரிக் கழிவுகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.

மீள்சுழற்சி செய்யும் பிரதான நிறுவனங்களுக்கு உரிய முறையில் குறித்த கழிவுப் பொருட்கள் சென்றடையவில்லை என சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, மீள்சுழற்சி செய்முறைகளை வலுப்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் கழிவு சேகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

நாளாந்தம் சூழலுடன் கலக்கும் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக்: வெளியான அதிர்ச்சித் தகவல் samugammedia இலங்கையில் நாளாந்தம் 932.4 மெற்றிக் தொன் பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலுடன் கலப்பதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.அதில், 300.30 மெற்றிக் டன் பிளாஸ்ரிக் சேகரிக்கப்படுவதாகவும், 632.12 பிளாஸ்ரிக் கழிவுகள் சூழலில் விடப்படுவதாகவும் குறிப்பிடப்படுகிறது.அவ்வாறு சூழலில் வீசப்படுகின்ற 419.47 மெற்றிக் டன் பிளாஸ்ரிக், எரிக்கப்படும் நிலையில், 38.48 மெற்றிக் டன் பிளாஸ்ரிக் கழிவுகள் மீள்சுழற்சிக்கு உட்படுத்தப்படுகின்றன.மீள்சுழற்சி செய்யும் பிரதான நிறுவனங்களுக்கு உரிய முறையில் குறித்த கழிவுப் பொருட்கள் சென்றடையவில்லை என சுற்றாடல் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனால் சுற்றுச் சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்படுகின்றது. எனவே, மீள்சுழற்சி செய்முறைகளை வலுப்படுத்தும் வகையில், நாடளாவிய ரீதியில் பிளாஸ்ரிக் கழிவு சேகரிப்பு நிலையங்களை நிறுவுவதற்கும் பிளாஸ்டிக் கழிவு சேகரிப்பு வலையமைப்பை வலுப்படுத்துவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement