• Jul 04 2025

தேயிலைத் தோட்டத்தில் ஒருவர் சடலமாக மீட்பு!

shanuja / Jul 3rd 2025, 2:32 pm
image

பொகவந்தலாவ -  கொட்டியாகலை  தேயிலைத் தோட்டத்தில்   அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (ஜூலை 2) மீட்கப்பட்டுள்ளது.


இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, 

குறித்த தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவினர் , அப்பகுதியில் ஒருவர் சடலமாக இருப்பதைக் கண்டு  பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.


உயிரிழந்தவர்  டிக்கோயா என் ஃபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 73 வயததான  கருப்பன் வீரப்பன்  என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

உயிரிழந்தவரின் பிள்ளைகள் தெரிவிக்கையில், எமது தந்தை சுகவீனமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று தெரிவித்தனர். 


சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

தேயிலைத் தோட்டத்தில் ஒருவர் சடலமாக மீட்பு பொகவந்தலாவ -  கொட்டியாகலை  தேயிலைத் தோட்டத்தில்   அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று (ஜூலை 2) மீட்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த தோட்டத்தில் தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்கள் குழுவினர் , அப்பகுதியில் ஒருவர் சடலமாக இருப்பதைக் கண்டு  பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.உயிரிழந்தவர்  டிக்கோயா என் ஃபீல்ட் தோட்டத்தை சேர்ந்த 73 வயததான  கருப்பன் வீரப்பன்  என  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  உயிரிழந்தவரின் பிள்ளைகள் தெரிவிக்கையில், எமது தந்தை சுகவீனமடைந்து டிக்கோயா ஆதார மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் என்று தெரிவித்தனர். சடலம் டிக்கோயா ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement