• May 19 2024

தினம் ஒரு புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடர்…யுவதியின் வினோத பழக்கம்! samugammedia

Tamil nila / Dec 8th 2023, 6:17 pm
image

Advertisement

அமெரிக்காவில் ஒரு பெண் தினத்துக்கு ஒரு புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடரை தின்பண்டமாக ரசித்து ருசித்து வருகிறார்.

அமெரிக்காவில்  பெண், ஒருவர் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பேபி பவுடரை தினமொரு புட்டியாக ருசித்து வருகிறார். அது ஆரோக்கியத்துக்கு கேடு என்பதை உணர்ந்திருந்தபோதும், அதன் சுவையிலிருந்து விடுபட முடியாது தவிக்கிறார். ட்ரேகா மார்டின் என்னும் 27 வயது பெண் திருமணமாகி, பொறுப்பான தாயாகவும் இருக்கிறார். ஆனபோதும், அனைவருடைய எச்சரிக்கையையும் மீறி அவருடைய விருப்பம் பேபி பவுடர் மீது இருக்கிறது.

குழந்தையை குளிப்பாட்டிய பின்னர் வழக்கமான தாய்மார்களைப் போலவே பேபி பவுடரை பயன்படுத்தும்போது, எதேச்சையாக அதனை ட்ரேகா ருசிக்க நேர்ந்தது. மக்காச்சோள மாவில் இதர வேதிசேர்மானங்கள் சேர்க்கப்பட்ட ஜான்சன்ஸ் பேபி பவுடரில் இருந்த ஏதோவொரு ருசி அவரைக் கட்டிப்போட்டது. அதன் பின்னர் வலிய பேபி பவுடர் ருசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இந்த வகையில், லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் வசிக்கும் ட்ரேகா மார்டின் தினத்துக்கு 623 கிராம் கொண்ட ஜான்சன்ஸ் பேபி பவுடர் புட்டியை காலி செய்து வருகிறார்.

இதற்காக அவருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு ரூ13 லட்சம் செலவாகிறது. பேபி பவுடரை வாய் நிறைய சேர்த்து அவை உமிழ் நீருடன் கரைவதன் ருசிக்கு தான் அடிமையாகிவிட்டதாக தன்னிலை விளக்கமும் தந்திருக்கிறார் ட்ரேகா. குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமன்றி ஜான்சன்ஸ் நிறுவனம் சார்பிலும் எச்சரித்தாயிற்று; ஆனாலும் பேபி பவுடரை ருசிப்பதிலிருந்து ட்ரேகாவால் மீள முடியவில்லை. அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த மாதங்களில் மட்டும் பொறுப்பான தாயாக பேபி பவுடரை தவிர்த்திருந்தாராம். மற்றபடி பவுடரை ருசிக்காவிடில் அன்றைய பொழுது தனக்கு முழுமையடையாது என்கிறார் ட்ரேகா.

பேபி பவுடரை ருசிப்பதில் அமெரிக்காவின் ட்ரேகா மார்டினுக்கு, ஒரு ’அக்கா’ இங்கிலாந்தில் இருக்கிறார். 5 குழந்தைகளுக்கு தாயான 44 வயதாகும் ஆன்டர்சன் என்ற பெண்மணி கடந்த 15 வருடங்களாக, தினத்துக்கு 200 கிராம் என ஜான்சன்ஸ் பேபி பவுடரை ருசித்து வருகிறார். இப்படி உணவு அல்லாதவற்றை ருசிக்கும் கோளாறை மருத்துவர்கள் ‘பிகா’(Pica) சிண்ட்ரோம் என்கிறார்கள். 

தினம் ஒரு புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடர்…யுவதியின் வினோத பழக்கம் samugammedia அமெரிக்காவில் ஒரு பெண் தினத்துக்கு ஒரு புட்டி ஜான்சன்ஸ் பேபி பவுடரை தின்பண்டமாக ரசித்து ருசித்து வருகிறார்.அமெரிக்காவில்  பெண், ஒருவர் குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பேபி பவுடரை தினமொரு புட்டியாக ருசித்து வருகிறார். அது ஆரோக்கியத்துக்கு கேடு என்பதை உணர்ந்திருந்தபோதும், அதன் சுவையிலிருந்து விடுபட முடியாது தவிக்கிறார். ட்ரேகா மார்டின் என்னும் 27 வயது பெண் திருமணமாகி, பொறுப்பான தாயாகவும் இருக்கிறார். ஆனபோதும், அனைவருடைய எச்சரிக்கையையும் மீறி அவருடைய விருப்பம் பேபி பவுடர் மீது இருக்கிறது.குழந்தையை குளிப்பாட்டிய பின்னர் வழக்கமான தாய்மார்களைப் போலவே பேபி பவுடரை பயன்படுத்தும்போது, எதேச்சையாக அதனை ட்ரேகா ருசிக்க நேர்ந்தது. மக்காச்சோள மாவில் இதர வேதிசேர்மானங்கள் சேர்க்கப்பட்ட ஜான்சன்ஸ் பேபி பவுடரில் இருந்த ஏதோவொரு ருசி அவரைக் கட்டிப்போட்டது. அதன் பின்னர் வலிய பேபி பவுடர் ருசிப்பதை வழக்கமாக்கிக் கொண்டார். இந்த வகையில், லூசியானாவின் நியூ ஆர்லியன்ஸில் வசிக்கும் ட்ரேகா மார்டின் தினத்துக்கு 623 கிராம் கொண்ட ஜான்சன்ஸ் பேபி பவுடர் புட்டியை காலி செய்து வருகிறார்.இதற்காக அவருக்கு இலங்கை ரூபாய் மதிப்பில் ஆண்டுக்கு ரூ13 லட்சம் செலவாகிறது. பேபி பவுடரை வாய் நிறைய சேர்த்து அவை உமிழ் நீருடன் கரைவதன் ருசிக்கு தான் அடிமையாகிவிட்டதாக தன்னிலை விளக்கமும் தந்திருக்கிறார் ட்ரேகா. குடும்பத்தினர், நண்பர்கள் மட்டுமன்றி ஜான்சன்ஸ் நிறுவனம் சார்பிலும் எச்சரித்தாயிற்று; ஆனாலும் பேபி பவுடரை ருசிப்பதிலிருந்து ட்ரேகாவால் மீள முடியவில்லை. அடுத்த குழந்தையை வயிற்றில் சுமந்திருந்த மாதங்களில் மட்டும் பொறுப்பான தாயாக பேபி பவுடரை தவிர்த்திருந்தாராம். மற்றபடி பவுடரை ருசிக்காவிடில் அன்றைய பொழுது தனக்கு முழுமையடையாது என்கிறார் ட்ரேகா.பேபி பவுடரை ருசிப்பதில் அமெரிக்காவின் ட்ரேகா மார்டினுக்கு, ஒரு ’அக்கா’ இங்கிலாந்தில் இருக்கிறார். 5 குழந்தைகளுக்கு தாயான 44 வயதாகும் ஆன்டர்சன் என்ற பெண்மணி கடந்த 15 வருடங்களாக, தினத்துக்கு 200 கிராம் என ஜான்சன்ஸ் பேபி பவுடரை ருசித்து வருகிறார். இப்படி உணவு அல்லாதவற்றை ருசிக்கும் கோளாறை மருத்துவர்கள் ‘பிகா’(Pica) சிண்ட்ரோம் என்கிறார்கள். 

Advertisement

Advertisement

Advertisement