டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு கார் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன.
இச்சம்பவம் நடைபெற்ற இடம் பிரதான மார்க்கெட் பகுதியாகும். இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.
மேலும் இந்த வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாகராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.
ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் அரச விடுதிகளில் 12 குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள நபர்களை விலாசம் மற்றும் அவர்களின் ஆதார் எண் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு அறையிலும் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 25 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பதிவெண் கொண்ட வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பின்னர் ராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
15 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன
ராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாநிலங்களில் இருந்து ரயில்கள் வந்து செல்வதால் “தேவசேனா” என்ற வெடிகுண்டு கண்டறியும் நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர காவல் குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் உச்சப்புளி ஐஏஎஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர்கள் மூலமாக வான் வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதையடுத்து வெடிப்புச் சம்பவத்தில் வெடிப்புக்குள்ளான காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், குறித்த காரினை பதிவு செய்வதற்கு போலியான அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த வெடிப்புச் சம்பவமானது ஒரு திட்டமிட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல் என இந்திய அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில், வெடிப்புக்குள்ளான காரில் முன்னாள் உரிமையாளர் மற்றும் தற்போதைய உரிமையாரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.
டெல்லியில் வெடித்து சிதறிய கார்; பலர் பலி இந்தியா முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு டெல்லி செங்கோட்டை அருகே நேற்று இரவு கார் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்துச்சிதறி, தீப்பிழம்பாக மாறியது. அருகில் இருந்த 4 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் வாகனங்களும் தீப்பிடித்து எரிந்தன. இச்சம்பவம் நடைபெற்ற இடம் பிரதான மார்க்கெட் பகுதியாகும். இந்த சூழலில் கார் வெடித்து சிதறிய பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த இடத்தில் கூடியிருந்த மக்கள் அலறியடித்து ஓடினர்.மேலும் இந்த வெடி விபத்தில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 24 பேர் காயமடைந்துள்ளதாகவும் டெல்லி காவல் ஆணையர் சதீஷ் கோல்ச்சா தெரிவித்துள்ளார்.இந்நிலையில் வெடி விபத்து ஏற்பட்டதை அடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.ராமநாதபுரம் மாவட்டத்தின் கடலோர பகுதியில் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் பக்தர்கள் அதிகம் கூடும் முக்கிய கோவில்களில் ஆயுதம் ஏந்திய போலீசார் மற்றும் வெடிகுண்டுகளை கண்டறியும் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாகராமேஸ்வரம், ஏர்வாடி தர்கா, ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகிறது.ராமேஸ்வரம் மற்றும் ஏர்வாடி தர்கா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் அரச விடுதிகளில் 12 குழுக்கள் அமைத்து தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள நபர்களை விலாசம் மற்றும் அவர்களின் ஆதார் எண் உள்ளிட்டவற்றை ஒவ்வொரு அறையிலும் தங்கியுள்ள சுற்றுலா பயணிகளிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.மேலும் ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளில் 25 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு வரும் போலீசார் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, டெல்லி, ஜார்கண்ட் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் பதிவெண் கொண்ட வாகனங்கள் முழுமையான சோதனைக்கு பின்னர் ராமேஸ்வரத்திற்குள் அனுமதிக்கின்றனர்.15 ரோந்து வாகனங்கள் கண்காணிப்பு பணியில் போலீசார் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனராமேஸ்வரம் ரயில் நிலையத்திற்கு மாநிலங்களில் இருந்து ரயில்கள் வந்து செல்வதால் “தேவசேனா” என்ற வெடிகுண்டு கண்டறியும் நாய் உதவியுடன் வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசார் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.கடற்கரைப் பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்த உளவுத்துறை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தனுஷ்கோடி உள்ளிட்ட முக்கிய கடல் பகுதிகளில் இந்திய கடற்படை, இந்திய கடலோர காவல் படை மற்றும் கடலோர காவல் குழும போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதுடன் உச்சப்புளி ஐஏஎஸ் பருந்து கடற்படை தளத்தில் உள்ள ஹெலிகாப்டர்கள் மூலமாக வான் வழி கண்காணிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து வெடிப்புச் சம்பவத்தில் வெடிப்புக்குள்ளான காரின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், குறித்த காரினை பதிவு செய்வதற்கு போலியான அடையாள அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக இந்திய பொலிஸார் விசாரணையில் கண்டறிந்துள்ளனர். இந்நிலையில், குறித்த வெடிப்புச் சம்பவமானது ஒரு திட்டமிட்ட பயங்கரவாத தற்கொலை குண்டு தாக்குதல் என இந்திய அரசாங்கம் சந்தேகம் வெளியிட்டிருந்தது. இதற்கிடையில், வெடிப்புக்குள்ளான காரில் முன்னாள் உரிமையாளர் மற்றும் தற்போதைய உரிமையாரை பொலிஸார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர்.