• May 09 2024

எரிபொருள் QR நடைமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia

Chithra / Aug 16th 2023, 7:12 am
image

Advertisement

எதிர்வரும் மாதமளவில் எரிபொருள் விநியோகத்தின் போது QR கோட் முறை இடைநிறுத்தப்படவுள்ளது.

தேசிய எரிபொருள் உரிமம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாகனங்களுக்கும் வாராந்தம் குறிப்பிட்டளவு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.

நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு வரையறுக்கப்பட்ட எரிபொருளை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.

எதிர்வரும் மாதம் இந்த எரிபொருள் உரிமத்திட்டத்தை இரத்து செய்வதற்கு முயற்சிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அவ்வாறு செய்ய முடியாவிட்டால் எரிபொருள் உரிமத்தின் அளவினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சினோபெக் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் எரிபொருள் விநியோகத்துடன் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் QR நடைமுறையில் ஏற்படவுள்ள மாற்றம் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு samugammedia எதிர்வரும் மாதமளவில் எரிபொருள் விநியோகத்தின் போது QR கோட் முறை இடைநிறுத்தப்படவுள்ளது.தேசிய எரிபொருள் உரிமம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு வாகனங்களுக்கும் வாராந்தம் குறிப்பிட்டளவு எரிபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது.நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி நிலைமைகளினால் இவ்வாறு வரையறுக்கப்பட்ட எரிபொருளை அனைவருக்கும் பகிர்ந்தளிக்க இந்த நடைமுறை பின்பற்றப்பட்டுள்ளது.எதிர்வரும் மாதம் இந்த எரிபொருள் உரிமத்திட்டத்தை இரத்து செய்வதற்கு முயற்சிப்பதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.அவ்வாறு செய்ய முடியாவிட்டால் எரிபொருள் உரிமத்தின் அளவினை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சினோபெக் நிறுவனம் போன்ற நிறுவனங்களின் எரிபொருள் விநியோகத்துடன் இவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement