• Nov 22 2024

இலங்கையில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்வில் ஏற்பட்ட மாற்றம்...! வெளியான அறிவிப்பு...!samugammedia

Sharmi / Jan 19th 2024, 11:51 am
image

பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இலங்கையில் இசைநிகழ்வொன்றை நடத்தவிருந்த நிலையில்  இசை நிகழ்வு நடைபெற ஒழுங்குபடுத்தப்பட்ட இடமானது மாற்றப்பட்டுள்ளது.


இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,


பிரபல திரைப்பட இசைக்கலைஞரும், பின்னணி பாடகருமான யுவன் சங்கர் ராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி மாலை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவிருந்த நிலையில் பெரும்பாலானோரின் கோரிக்கைகளுக்கு அமைய கொழும்பு CR & FC மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. 


இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றையதினம்(18) கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.


இதன்போது, ஆரா எண்டர்டெய்மன்ட் நிறுவன முகாமைத்துவ இயக்குநர் ஆனண்ட் ராமநாதன், சதீஸ் ஜுவலரி தலைவர் ஆர்.சதாசிவம் மற்றும் புக் மை ஷோ பிரதம செயற்பாட்டாளர் சுஹைப் ஜவாஹிட் ஆகியோர்கள் கருத்துத் தெரிவித்தனர்.


இவ் இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான ஹரிச்சரன், என்ரியா, பிரேம்ஜி, திவாகர், சாம்விஷால், ருக்சார், சௌந்தர்யா, கௌதம், எம்.சி சனா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.




இலங்கையில் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்வில் ஏற்பட்ட மாற்றம். வெளியான அறிவிப்பு.samugammedia பிரபல தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளரான யுவன் சங்கர் ராஜா இலங்கையில் இசைநிகழ்வொன்றை நடத்தவிருந்த நிலையில்  இசை நிகழ்வு நடைபெற ஒழுங்குபடுத்தப்பட்ட இடமானது மாற்றப்பட்டுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பிரபல திரைப்பட இசைக்கலைஞரும், பின்னணி பாடகருமான யுவன் சங்கர் ராஜாவின் மாபெரும் இசை நிகழ்ச்சி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி சனிக்கிழமை மாலை சுகததாச உள்ளக அரங்கில் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 24 ஆம் திகதி மாலை கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இடம்பெறவிருந்த நிலையில் பெரும்பாலானோரின் கோரிக்கைகளுக்கு அமைய கொழும்பு CR & FC மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு நேற்றையதினம்(18) கொள்ளுப்பிட்டியிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.இதன்போது, ஆரா எண்டர்டெய்மன்ட் நிறுவன முகாமைத்துவ இயக்குநர் ஆனண்ட் ராமநாதன், சதீஸ் ஜுவலரி தலைவர் ஆர்.சதாசிவம் மற்றும் புக் மை ஷோ பிரதம செயற்பாட்டாளர் சுஹைப் ஜவாஹிட் ஆகியோர்கள் கருத்துத் தெரிவித்தனர்.இவ் இசை நிகழ்ச்சியில் பிரபல பாடகர்களான ஹரிச்சரன், என்ரியா, பிரேம்ஜி, திவாகர், சாம்விஷால், ருக்சார், சௌந்தர்யா, கௌதம், எம்.சி சனா ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement