• Oct 18 2025

தீயில் கருகி நாசமாகிய வர்த்தக நிலையம் - கடையை மூடிவிட்டு சென்ற பின்னர் சம்பவம்!

shanuja / Oct 16th 2025, 12:23 pm
image

வர்த்தக நிலையம் ஒன்றின் உட்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசமடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 


சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,


கடை உரிமையாளர் நேற்றையதினம் கடையினை பூட்டிவிட்டு சென்று, மீண்டும் இன்றையதினம் காலை வியாபார நடவடிக்கைகளுக்காக கடையினை திறந்துள்ளார். 


அதன்போது கடையின் உட்பகுதி முழுவதும் தீயில் எரிந்து உள்ளதை அவதானித்தார். கடையின் உட்பகுதி தீயில் எரிந்ததால் அங்கிருந்த பொருட்கள் முழுவதும் தீயில் கருகி நாசமடைந்துள்ளன. 


அதன் பின் குறித்த சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் மருதங்கேணி பொலிஸ் நிலையததில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 


முறைப்பாட்டுக்கமைய சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

தீயில் கருகி நாசமாகிய வர்த்தக நிலையம் - கடையை மூடிவிட்டு சென்ற பின்னர் சம்பவம் வர்த்தக நிலையம் ஒன்றின் உட்பகுதி முழுவதும் தீயில் கருகி நாசமடைந்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று வடக்கு பகுதியில் உள்ள வர்த்தக நிலையமொன்றில் நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,கடை உரிமையாளர் நேற்றையதினம் கடையினை பூட்டிவிட்டு சென்று, மீண்டும் இன்றையதினம் காலை வியாபார நடவடிக்கைகளுக்காக கடையினை திறந்துள்ளார். அதன்போது கடையின் உட்பகுதி முழுவதும் தீயில் எரிந்து உள்ளதை அவதானித்தார். கடையின் உட்பகுதி தீயில் எரிந்ததால் அங்கிருந்த பொருட்கள் முழுவதும் தீயில் கருகி நாசமடைந்துள்ளன. அதன் பின் குறித்த சம்பவம் தொடர்பாக வர்த்தக நிலைய உரிமையாளர் மருதங்கேணி பொலிஸ் நிலையததில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். முறைப்பாட்டுக்கமைய சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement