• Jan 11 2025

பட்டப்படிப்பு தேவையற்றது என்று கருதக் கூடிய நிலை வந்துவிட்டது - யாழில் போராட்டம்!

Chithra / Dec 13th 2024, 2:23 pm
image

  

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 

'தாம் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், புதிய  அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.

பட்டப்படிப்பு தேவையற்றது என்று கருதக் கூடிய நிலை வந்துள்ளதாகவும் தற்போதைய அரசும் எமக்கு சாதகமான பதில் எதையும் இதுவரை தரவில்லை எனவும்  வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.


பட்டப்படிப்பு தேவையற்றது என்று கருதக் கூடிய நிலை வந்துவிட்டது - யாழில் போராட்டம்   வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.இப் போராட்டத்தில் வடக்கு மாகாணத்தை சேர்ந்த வேலையற்ற பட்டதாரிகள் பலர் கலந்துகொண்டிருந்தனர்.இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'தாம் பட்டப் படிப்பினை நிறைவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகின்ற போதிலும் அரச வேலைவாய்ப்பு தமக்கு இதுவரை வழங்கப்படவில்லை எனவும், புதிய  அரசாங்கம் தமக்கான அரச நியமனத்தை வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தனர்.பட்டப்படிப்பு தேவையற்றது என்று கருதக் கூடிய நிலை வந்துள்ளதாகவும் தற்போதைய அரசும் எமக்கு சாதகமான பதில் எதையும் இதுவரை தரவில்லை எனவும்  வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement