• Oct 14 2026

65 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை! மூதூர் பாரதி மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை

Aathira / Oct 12th 2026, 7:51 pm
image

மூதூர் கல்வி வலயத்தைச் சார்ந்த தி/மூ/பாரதி மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்று, பாடசாலையின் 65 வருட வரலாற்றில் முதல் முறையாக 3 மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.

மூதூர் வலயத்திலிருந்து அதிகூடிய மாணவர்களை தேசிய மட்டத்திற்கு அனுப்பும் பாடசாலையாகவும், சொல்வதெழுதுதல் (Dictation) நிகழ்வை தேசியத்திற்கு அனுப்பும் ஒரே பாடசாலை இதுவாகும்.

சாதனையாளர்கள் செல்வி M.கிஷானிக்கா, செல்வி P.பிரத்திசா, செல்வி A.கஜித்தனா

பயிற்றுவித்த ஆசிரியர் செ.உதயன், உதவி புரிந்த  திருமதி ஜீனத் ஷகீலா  ஆசிரியர் மற்றும்  பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின்  அதிபர் பு.ஜெயகாந்தன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. இவர்கள் இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறும் தேசிய மட்டப்  போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

65 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறை மூதூர் பாரதி மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை மூதூர் கல்வி வலயத்தைச் சார்ந்த தி/மூ/பாரதி மகா வித்தியாலயம் கிழக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்று, பாடசாலையின் 65 வருட வரலாற்றில் முதல் முறையாக 3 மாணவிகள் தேசிய மட்டத்திற்கு தெரிவாகியுள்ளனர்.மூதூர் வலயத்திலிருந்து அதிகூடிய மாணவர்களை தேசிய மட்டத்திற்கு அனுப்பும் பாடசாலையாகவும், சொல்வதெழுதுதல் (Dictation) நிகழ்வை தேசியத்திற்கு அனுப்பும் ஒரே பாடசாலை இதுவாகும்.சாதனையாளர்கள் செல்வி M.கிஷானிக்கா, செல்வி P.பிரத்திசா, செல்வி A.கஜித்தனாபயிற்றுவித்த ஆசிரியர் செ.உதயன், உதவி புரிந்த  திருமதி ஜீனத் ஷகீலா  ஆசிரியர் மற்றும்  பல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய பாடசாலையின்  அதிபர் பு.ஜெயகாந்தன் அவர்களுக்கும் பாடசாலை சமூகம்  வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றது. இவர்கள் இம்மாத இறுதியில் கொழும்பில் நடைபெறும் தேசிய மட்டப்  போட்டியில் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement