இலங்கையில் சகோதரிகள் இருவருக்கு பயங்கரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
ஹபராதுவ, பிடிதுவ பகுதியில் சகோதரிகள் இருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த இருவரும் திருமணம் செய்யாத சகோதரிகள் என்பதுடன், இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் 86 மற்றும் 81 வயதுடைய சகோதரிகள் என தெரிவிக்கப்படுகின்றது.
ஹபராதுவ பொலிஸாரின் தகவலின்படி, குறித்த இரு சகோதரிகளும் பிடிதுவ பகுதியில் விசாலமான காணியொன்றில் அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில், அவர்களது வீட்டின் பின்புற முற்றத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.
சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸாருடன் காலி பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
தனிமையில் வாழ்ந்த சகோதரிகளுக்கு நடந்த பயங்கரம்; இலங்கையை உலுக்கிய சம்பவம் இலங்கையில் சகோதரிகள் இருவருக்கு பயங்கரமான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஹபராதுவ, பிடிதுவ பகுதியில் சகோதரிகள் இருவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த இருவரும் திருமணம் செய்யாத சகோதரிகள் என்பதுடன், இருவரும் ஓய்வுபெற்ற ஆசிரியைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு உயிரிழந்தவர்கள் 86 மற்றும் 81 வயதுடைய சகோதரிகள் என தெரிவிக்கப்படுகின்றது. ஹபராதுவ பொலிஸாரின் தகவலின்படி, குறித்த இரு சகோதரிகளும் பிடிதுவ பகுதியில் விசாலமான காணியொன்றில் அமைந்துள்ள வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளனர்.இந்நிலையில், அவர்களது வீட்டின் பின்புற முற்றத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.இந்த இரட்டைக் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.சம்பவம் தொடர்பில் ஹபராதுவ பொலிஸாருடன் காலி பிரிவின் குற்ற விசாரணைப் பிரிவினரும் இணைந்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.