வவுனியா, தவசிகுளம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோது, கடவை ஊழியரின் அலட்சியத்தால் ஏற்படவிருந்த பாரிய விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.
தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள ஓகான் (ORHAN) நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்திலேயே இன்று காலை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயணித்துள்ளனர்.
ரயில் கடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், குறித்த ரயில் கடவையின் பாதுகாப்புக் கதவுகள் மூடப்படாமல் திறந்த நிலையிலிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன், கடவையை நோக்கி வந்த ரயில் எச்சரிக்கை ஒலி எழுப்பாமல் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கடவைக்குள் நுழைய முற்பட்ட நிலையில், ரயில் வருவதைக் கண்டு பேருந்து சாரதி உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் பெரும் அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதுடன், பேருந்தில் பயணித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.
ரயில் கடந்து சென்ற பின்னரே கடவைப் பொறுப்பிலிருந்த ஊழியர் தூக்கத்திலிருந்து விழித்ததாகவும், தனது தவறுக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சம்பவ இடத்தில் ஒன்றுகூடி, கடவை ஊழியரின் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தைக் கண்டு, அங்கிருந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள் பலரும் தமது அச்சத்தையும் வேதனையையும் கண்ணீர் மல்க வெளிப்படுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை ரயில் நிலையத்திற்கும், ரயில் கடவைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கும் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக சீரமைத்து, சம்பவத்தில் அலட்சியமாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் ஊழியர் மீது உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி மாணவர்களின் உயிருடன் விளையாடிய அலட்சியம் வவுனியாவில் பேரதிர்ச்சி வவுனியா, தவசிகுளம் பகுதியில் மாற்றுத்திறனாளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ரயில் கடவையைக் கடக்க முற்பட்டபோது, கடவை ஊழியரின் அலட்சியத்தால் ஏற்படவிருந்த பாரிய விபத்து நூலிழையில் தவிர்க்கப்பட்டுள்ளது.தவசிகுளம் பகுதியில் அமைந்துள்ள ஓகான் (ORHAN) நிறுவனத்திற்குச் சொந்தமான பேருந்திலேயே இன்று காலை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயணித்துள்ளனர்.ரயில் கடந்து சென்றுகொண்டிருந்த வேளையில், குறித்த ரயில் கடவையின் பாதுகாப்புக் கதவுகள் மூடப்படாமல் திறந்த நிலையிலிருந்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.அத்துடன், கடவையை நோக்கி வந்த ரயில் எச்சரிக்கை ஒலி எழுப்பாமல் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.இதன்போது மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கடவைக்குள் நுழைய முற்பட்ட நிலையில், ரயில் வருவதைக் கண்டு பேருந்து சாரதி உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார்.இதனால் பெரும் அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதுடன், பேருந்தில் பயணித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர்.ரயில் கடந்து சென்ற பின்னரே கடவைப் பொறுப்பிலிருந்த ஊழியர் தூக்கத்திலிருந்து விழித்ததாகவும், தனது தவறுக்காக பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் முச்சக்கர வண்டிச் சாரதிகள் சம்பவ இடத்தில் ஒன்றுகூடி, கடவை ஊழியரின் பொறுப்பற்ற செயற்பாட்டுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்த சம்பவத்தைக் கண்டு, அங்கிருந்த முச்சக்கர வண்டிச் சாரதிகள் பலரும் தமது அச்சத்தையும் வேதனையையும் கண்ணீர் மல்க வெளிப்படுத்தியுள்ளனர்.இச்சம்பவம் தொடர்பில் வவுனியா தலைமை ரயில் நிலையத்திற்கும், ரயில் கடவைகளுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கும் உடனடியாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், குறித்த ரயில் கடவையின் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனடியாக சீரமைத்து, சம்பவத்தில் அலட்சியமாகச் செயற்பட்டதாகக் கூறப்படும் ஊழியர் மீது உரிய ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.