இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராஜ்கர் பகுதியில் 25 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் நேற்று(05) ஐந்து வயது சிறுமி தவறி விழுந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
ராஜ்கரில் உள்ள பிப்லியா ரசோதா கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலேயே குறித்த சிறுமி விழுந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சிறுமியை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் சுமார் 9 மணி நேர கடும் போராட்டத்தின் பின்னர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிறுமியை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து பத்திரமாக வெளியே எடுத்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில வருடங்களாக பாதுகாப்பற்ற ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து விபத்துக்குள்ளாவதும் இந்தியாவில் தொடர் நிகழ்வாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமி. நீண்ட போராட்டத்தின் பின்னர் பத்திரமாக மீட்பு.samugammedia இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ராஜ்கர் பகுதியில் 25 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் நேற்று(05) ஐந்து வயது சிறுமி தவறி விழுந்துள்ளார்.குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.ராஜ்கரில் உள்ள பிப்லியா ரசோதா கிராமத்தில் உள்ள ஆழ்துளைக் கிணற்றிலேயே குறித்த சிறுமி விழுந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் குறித்த சிறுமியை மீட்கும் நடவடிக்கைகள் ஆரம்பமான நிலையில் சுமார் 9 மணி நேர கடும் போராட்டத்தின் பின்னர் இன்று அதிகாலை 2.30 மணியளவில் சிறுமியை ஆழ்துளைக் கிணற்றில் இருந்து பத்திரமாக வெளியே எடுத்ததாக மீட்பு பணியில் ஈடுபட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.கடந்த சில வருடங்களாக பாதுகாப்பற்ற ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுந்து விபத்துக்குள்ளாவதும் இந்தியாவில் தொடர் நிகழ்வாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.