• Aug 03 2025

சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்து சபாநாயகருக்கு பறந்த கடிதம்

Chithra / Aug 2nd 2025, 1:43 pm
image

 

தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு தலைவரின் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பது குறித்து சபாநாயகருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நினைவூட்டலை அனுப்பியுள்ளது.

இந்த விடயத்தை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவுக்கு முழுமையாக செயற்படத் தேவையான தலைவர் ஒருவரை பரிந்துரைக்குமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அரசியலமைப்பு பேரவையின்மீது, பொதுமக்களின் நம்பிக்கையை கவனத்தில் கொண்டு இந்த விடயம் கையாளப்படவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன இவ்வருட ஆரம்பத்தில் பதவி விலகியதில் இருந்து இதுவரை அந்தப் பதவியை நிரப்ப எந்த நியமனமும் செய்யப்படவில்லை.

எனவே தலைவர் இல்லாத நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடினமாகியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.


சட்டத்தரணிகள் சங்கத்திடமிருந்து சபாநாயகருக்கு பறந்த கடிதம்  தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழு தலைவரின் பதவி நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருப்பது குறித்து சபாநாயகருக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நினைவூட்டலை அனுப்பியுள்ளது.இந்த விடயத்தை தீவிரமாகக் கருத்தில் கொண்டு, தகவல் அறியும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவுக்கு முழுமையாக செயற்படத் தேவையான தலைவர் ஒருவரை பரிந்துரைக்குமாறு அந்த கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் அரசியலமைப்பு பேரவையின்மீது, பொதுமக்களின் நம்பிக்கையை கவனத்தில் கொண்டு இந்த விடயம் கையாளப்படவேண்டும் என்றும் சட்டத்தரணிகள் சங்கம் கோரியுள்ளது.ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்ன இவ்வருட ஆரம்பத்தில் பதவி விலகியதில் இருந்து இதுவரை அந்தப் பதவியை நிரப்ப எந்த நியமனமும் செய்யப்படவில்லை.எனவே தலைவர் இல்லாத நிலையில், ஆணைக்குழுவின் செயற்பாடுகள் கடினமாகியுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement