• Jan 23 2025

அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து விழுந்த சிறுமி மரணம்..!

Sharmi / Jan 11th 2025, 9:17 am
image

அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் நேற்றையதினம்(10) இரவு இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுமியின் தாயார், மன அழுத்தம் காரணமாக சிறிது காலமாக வைத்திய சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இதேவேளை, குறித்த  சிறுமி மாடியில்  இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதை அறிய பொரளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து விழுந்த சிறுமி மரணம். அடுக்குமாடி குடியிருப்பின் மேற்பகுதியிலிருந்து விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் நேற்றையதினம்(10) இரவு இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி படுகாயமடைந்த நிலையில் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.உயிரிழந்த சிறுமியின் தாயார், மன அழுத்தம் காரணமாக சிறிது காலமாக வைத்திய சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.இதேவேளை, குறித்த  சிறுமி மாடியில்  இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதை அறிய பொரளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement