• Apr 21 2025

முச்சக்கரவண்டியில் சென்ற சிறுமி பரிதாப மரணம்: அதிகாலையில் துயரம்..!

Sharmi / Apr 15th 2025, 9:42 am
image

எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் வாகன விபத்தில் சிக்கி 6 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று(15) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் பயணி, இரண்டு பெண்கள் மற்றும் மூன்று சிறுமிகள் எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மீதமுள்ளவர்கள் எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உயிரிழந்த குறித்த சிறுமி, குருந்துவத்த பிடிகல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் எல்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த  விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


முச்சக்கரவண்டியில் சென்ற சிறுமி பரிதாப மரணம்: அதிகாலையில் துயரம். எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் வாகன விபத்தில் சிக்கி 6 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் இன்று(15) அதிகாலையில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுஎல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்பிட்டிய-அம்பலாங்கொட வீதியில் அம்பலாங்கொடையிலிருந்து எல்பிட்டிய நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டி எதிர் திசையில் இருந்து வந்த வேன் ஒன்றின் மீது மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டியின் ஓட்டுநர், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ஆண் பயணி, இரண்டு பெண்கள் மற்றும் மூன்று சிறுமிகள் எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.காயமடைந்த மீதமுள்ளவர்கள் எல்பிட்டிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.உயிரிழந்த குறித்த சிறுமி, குருந்துவத்த பிடிகல பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சடலம் எல்பிட்டிய மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.அதேவேளை குறித்த  விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், எல்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement