• May 03 2024

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம்...! நீதி கட்டாயம் நிலை நாட்டப்பட வேண்டும்..! வைத்தியர் சிவதாஸ் தெரிவிப்பு..!samugammedia

Sharmi / Sep 9th 2023, 2:58 pm
image

Advertisement

யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவரின் கை மணிக்கட்டுப் பகுதியுடன் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில்  நீதி கட்டாயம் நிலை நாட்டப்பட வேண்டியதாகக் காணப்படினும் இவற்றைக்  கையாளும் போது நீதியை சட்டதிட்டங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதை விட குறித்த விடயங்களிலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பை வெளிக்கொணர்வதே பிரதானமாகும் என யாழ் போதனா வைத்தியசாலையின் உளவளத்துறை வைத்தியர் சிவதாஸ் தெரிவித்தார்.

தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  உளவளத்துணை டிப்ளோமா கற்கை நெறியின்  ஆரம்ப நிகழ்வு  இன்று(09) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உளவளத்துறை ஆலோசனைகளுக்கான வளப்பற்றாக்குறை நிலவுகின்றது.   அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவரின் கை மணிக்கட்டுப் பகுதியுடன் அகற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இவ்வாறான விடயங்களில்  நீதி கட்டாயம் நிலை நாட்டப்பட வேண்டியதாகக் காணப்படினும் இவற்றைக்  கையாளும் போது நீதியை சட்ட திட்டங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதை விட குறித்த விடயங்களிலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பை வெளிக்கொணர்வதே பிரதானமாகும்.

நாங்கள் நீதி மற்றும் குணமாக்குதலை ஒரே கூடைக்குள் இட்டு குழப்பிக்கொண்டிருப்பதாலே 14 வருடங்களாகியும் குணமாகாமலிருப்பதற்கு அடிப்படையாகவுள்ளது.

சாதாரணமாக தீர்வு காணும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வழிகள் காணப்படினும் சில இடங்களில் அதற்காகத் தீர்வு காண முயற்சிக்கும் உளவளத்துறை ஆலோசகர்களால் பிரச்சினைகள் ஏற்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

பாராளுமன்றில்  "மன நோயாளிகள் போல் வைத்தியர்கள் செயற்படுகின்றார்கள்" என்ற பாராளுமன்ற உறுப்பினரின்  கருத்துக்களை யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியர்கள் மனநோயாளிகள் என்று ஊடகங்களில் வெளியாகின்றது. 

எனவே எமது பிரதேசங்களில் காணப்படும் பத்து பத்திரிகைகளுடனும், பத்து கட்சிகளுடனும், பத்து அமைப்புகளுடனும்  பணிபுரிவது மிகக் கடினமாகும்.  எனத் தெரிவித்தார்.

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம். நீதி கட்டாயம் நிலை நாட்டப்பட வேண்டும். வைத்தியர் சிவதாஸ் தெரிவிப்பு.samugammedia யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவரின் கை மணிக்கட்டுப் பகுதியுடன் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில்  நீதி கட்டாயம் நிலை நாட்டப்பட வேண்டியதாகக் காணப்படினும் இவற்றைக்  கையாளும் போது நீதியை சட்டதிட்டங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதை விட குறித்த விடயங்களிலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பை வெளிக்கொணர்வதே பிரதானமாகும் என யாழ் போதனா வைத்தியசாலையின் உளவளத்துறை வைத்தியர் சிவதாஸ் தெரிவித்தார்.தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தின்  உளவளத்துணை டிப்ளோமா கற்கை நெறியின்  ஆரம்ப நிகழ்வு  இன்று(09) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணியளவில் இடம்பெற்றது.குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,உளவளத்துறை ஆலோசனைகளுக்கான வளப்பற்றாக்குறை நிலவுகின்றது.   அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிறுமியொருவரின் கை மணிக்கட்டுப் பகுதியுடன் அகற்றப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. இவ்வாறான விடயங்களில்  நீதி கட்டாயம் நிலை நாட்டப்பட வேண்டியதாகக் காணப்படினும் இவற்றைக்  கையாளும் போது நீதியை சட்ட திட்டங்களின் அடிப்படையில் பெற்றுக்கொள்வதை விட குறித்த விடயங்களிலிருந்து பாதிக்கப்பட்ட தரப்பை வெளிக்கொணர்வதே பிரதானமாகும்.நாங்கள் நீதி மற்றும் குணமாக்குதலை ஒரே கூடைக்குள் இட்டு குழப்பிக்கொண்டிருப்பதாலே 14 வருடங்களாகியும் குணமாகாமலிருப்பதற்கு அடிப்படையாகவுள்ளது.சாதாரணமாக தீர்வு காணும் பிரச்சினைகள் தீர்க்கப்பட வழிகள் காணப்படினும் சில இடங்களில் அதற்காகத் தீர்வு காண முயற்சிக்கும் உளவளத்துறை ஆலோசகர்களால் பிரச்சினைகள் ஏற்பட்ட சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.பாராளுமன்றில்  "மன நோயாளிகள் போல் வைத்தியர்கள் செயற்படுகின்றார்கள்" என்ற பாராளுமன்ற உறுப்பினரின்  கருத்துக்களை யாழ்ப்பாணத்திலுள்ள வைத்தியர்கள் மனநோயாளிகள் என்று ஊடகங்களில் வெளியாகின்றது.  எனவே எமது பிரதேசங்களில் காணப்படும் பத்து பத்திரிகைகளுடனும், பத்து கட்சிகளுடனும், பத்து அமைப்புகளுடனும்  பணிபுரிவது மிகக் கடினமாகும்.  எனத் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement