• Sep 08 2024

மிக எளிமையாக நடந்து முடிந்த பிரபல நடிகர் மகளின் திருமணம்! வைரல் போட்டோஸ்

Aathira / May 3rd 2024, 1:05 pm
image

Advertisement

மலையாள நடிகரான ஜெயராம், தமிழ் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். முறைமாமன் படம் படத்தில் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து கமலுடன் தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்.

இது தவிர விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் அவர் நடித்த காட்சிகள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு தனது நடிப்பை ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் வெளிப்படுத்தி இருப்பார்.

நடிகர் ஜெயராமுக்கு மாளவிகா என்ற மகளும், காளிதாஸ் என்ற மகனும் உள்ளனர். இதில் அவரின் மகன் தந்தையைப் போலவே சினிமாவில் கலக்கி வருகின்றார்.


இந்த நிலையில், நடிகர் ஜெயராமின் மகள் திருமணம் கேரளாவில் மிக எளிமையாக இன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் உள்ள குருவாயூர் என்ற புகழ்பெற்ற கோவிலில் அவர்களது திருமணம் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்று முடிந்துள்ளது.


இதைத் தொடர்ந்து ஜெயராம மகள் மாளவிகா மற்றும் மருமகன் நவனீத் கிரீஷ் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



மிக எளிமையாக நடந்து முடிந்த பிரபல நடிகர் மகளின் திருமணம் வைரல் போட்டோஸ் மலையாள நடிகரான ஜெயராம், தமிழ் உட்பட பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். முறைமாமன் படம் படத்தில் தமிழில் அறிமுகமான இவர், அடுத்தடுத்து கமலுடன் தெனாலி, பஞ்சதந்திரம் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார்.இது தவிர விஜய்யுடன் துப்பாக்கி படத்திலும் அவர் நடித்த காட்சிகள் ரசிகர்களால் இன்றும் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு தனது நடிப்பை ரசிகர்கள் மனதை கொள்ளை கொள்ளும் வகையில் வெளிப்படுத்தி இருப்பார்.நடிகர் ஜெயராமுக்கு மாளவிகா என்ற மகளும், காளிதாஸ் என்ற மகனும் உள்ளனர். இதில் அவரின் மகன் தந்தையைப் போலவே சினிமாவில் கலக்கி வருகின்றார்.இந்த நிலையில், நடிகர் ஜெயராமின் மகள் திருமணம் கேரளாவில் மிக எளிமையாக இன்றைய தினம் நடந்து முடிந்துள்ளது. கேரளாவில் உள்ள குருவாயூர் என்ற புகழ்பெற்ற கோவிலில் அவர்களது திருமணம் குடும்பத்தார் முன்னிலையில் நடைபெற்று முடிந்துள்ளது.இதைத் தொடர்ந்து ஜெயராம மகள் மாளவிகா மற்றும் மருமகன் நவனீத் கிரீஷ் ஆகியோரின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement