உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய எலும்பு பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் லின் சியான்பெங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்களால் இந்த புதிய எலும்பு பசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கு, 'போன் - 2' என பெயரிடப்பட்டுள்ளது.
இதன் மூலம், உடைந்த எலும்புத் துண்டுகளை இரண்டில் இருந்து மூன்று நிமிடங்களில் ஒட்ட வைக்க முடியும் என்றும், இதனால், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான நேரம் கணிசமாகக் குறையும் எனவும் கூறப்படுகிறது.
தற்போது பயன்படுத்தப்படும் உலோக உள் வைப்புகளுக்குப் பதிலாக இது ஒரு புரட்சிகரமான மாற்றாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
உடைந்த எலும்புகளை மூன்றே நிமிடத்தில் ஒட்ட வைக்கும் பசை; கண்டுபிடித்து அசத்திய சீன விஞ்ஞானிகள் உடைந்த எலும்புகளை சரிசெய்ய, 'போன் க்ளூ' எனும் புதிய எலும்பு பசையை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஜெஜியாங் மாகாணத்தைச் சேர்ந்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் லின் சியான்பெங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்களால் இந்த புதிய எலும்பு பசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதற்கு, 'போன் - 2' என பெயரிடப்பட்டுள்ளது.இதன் மூலம், உடைந்த எலும்புத் துண்டுகளை இரண்டில் இருந்து மூன்று நிமிடங்களில் ஒட்ட வைக்க முடியும் என்றும், இதனால், சிக்கலான அறுவை சிகிச்சைகளுக்கான நேரம் கணிசமாகக் குறையும் எனவும் கூறப்படுகிறது.தற்போது பயன்படுத்தப்படும் உலோக உள் வைப்புகளுக்குப் பதிலாக இது ஒரு புரட்சிகரமான மாற்றாக அமையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.