• Mar 26 2025

மோட்டார் சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய அரச பேருந்து, பறிபோனது உயிர் - யாழில் துயரம்

Thansita / Mar 25th 2025, 11:05 pm
image


யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

ஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த 82 வயதடைய குருசாமி கணேசலிங்கம்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் ஊர்காவற்துறை - பாலக்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். 

இந்நிலையில் வேகமாக வந்த அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.

பின்னர் 22ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுஇ அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார்

இந் நிலையில் இன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

மோட்டார் சைக்கிளில் சென்றவரை மோதித்தள்ளிய அரச பேருந்து, பறிபோனது உயிர் - யாழில் துயரம் யாழில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் மீது அரச பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் குறித்த நபர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதுஊர்காவற்துறை, புளியங்கூடல் தெற்கு பகுதியை சேர்ந்த 82 வயதடைய குருசாமி கணேசலிங்கம்  என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.கடந்த 22 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் ஊர்காவற்துறை - பாலக்காட்டு சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தார். இந்நிலையில் வேகமாக வந்த அரச பேருந்து வேகக் கட்டுப்பாட்டை இழந்து அவர் மீது மோதியதில் அவர் படுகாயமடைந்தார்.பின்னர் 22ஆம் திகதி ஊர்காவற்துறை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுஇ அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்ற வந்தார்இந் நிலையில் இன்று  சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement