• May 17 2024

யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான பிரார்த்தனை நிகழ்வு! மாணவர்களுக்கு விசேட அழைப்பு samugammedia

Chithra / Jul 15th 2023, 11:42 am
image

Advertisement

மாணவர்களது கல்வி வளர்ச்சிக்காகவும், இளையவர்களது நல் ஒழுக்க விழுமியங்கள் உயர்வடைவதற்காகவும், சைவ தமிழ் கலாசாராம் பேணப்படுவதற்காகவும் மிக பிரமாண்டமான பிராத்தனை நிகழ்வு ஒன்று நடத்த யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வரும் 30ம் திகதி யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சரஸ்வதி ஆலயத்தில் குறித்த பிராரத்தனை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

சண்டிலிப்பாய் சரஸ்வதி ஆலயத்தின் வாசுதேவ குருக்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 30 ஆம் திகதி வருகின்ற ஆடி மாதம் மூல நட்சத்திலேயே சர்ஸ்தி அம்பாளுக்கு மாணவர்களது கல்வி வளர்ச்சிக்காகவும், இளையவர்களது நல் ஒழுக்க விழுமியங்கள் உயர்வடைவதற்காகவும், சைவ தமிழ் கலாசாராம் பேணப்படுவதற்காகவும் மிக பிரமாண்டமான பிராத்தனை நிகழ்வு நடைபெற இருக்கின்றது.

இந்த அற்புதமான நிகழ்வினை இலங்கை வரலாற்றிலேயே முதன்மையுறச் செய்யும் வகையில் 108 சிவாச்சாரியார்கள் 108 கோம் குண்டங்களிலேயே ஆகுதிகள் வளர்க்கப்பட இருக்கிறது.

சரஸ்வதி தேவியினுடைய திவ்வியமான மந்திரங்களை எல்லாம் உச்சாடனம் செய்வதோடு மாணவர்கள், இளையவர்கள் மற்றும் பெரியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சரஸ்வதி அம்பாளுடைய பாசுரங்களையும் கவச மந்திரங்களையும் நல்லாம் பாராயணம் செய்ய இந்த அற்புதமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது.

இவ்வாறு சிறப்புமிக்க இப்பிரார்த்தனை நிகழ்வில் இளையவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சரஸ்வதி அம்பாளின் திருவருளுக்கு பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்வதோடு, கடந்த மாதத்தில் இருந்து இந்த பிரார்த்தனையை வலுச்சேர்ப்பதற்காக ஒவ்வொரு இல்லத்திலும் மாணவர்கள் தங்கள் தங்கள் பிரார்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

இப்பிரார்த்தனையில் இணைந்து கொள்ளாதவர்கள் அந்த பிரார்த்தனை மந்திரங்களை பிரார்த்தனை திரவ்வியங்களை ஆலயத்திலேயே பெற்று பிரார்த்தனையில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

எதிர்வரும் 30ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 08.00 மணிக்கு கோம ஆராதனைகள் மிக சிறப்பாக நடைபெற இருக்கின்றது.

அடியவர்களும் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்லதொரு சமூகத்தை உருவாக்க பிரார்த்தனை செய்து கொள்ள அனைவரையும் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.


யாழில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரமாண்டமான பிரார்த்தனை நிகழ்வு மாணவர்களுக்கு விசேட அழைப்பு samugammedia மாணவர்களது கல்வி வளர்ச்சிக்காகவும், இளையவர்களது நல் ஒழுக்க விழுமியங்கள் உயர்வடைவதற்காகவும், சைவ தமிழ் கலாசாராம் பேணப்படுவதற்காகவும் மிக பிரமாண்டமான பிராத்தனை நிகழ்வு ஒன்று நடத்த யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வரும் 30ம் திகதி யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் சரஸ்வதி ஆலயத்தில் குறித்த பிராரத்தனை நிகழ்வு இடம்பெறவுள்ளது.சண்டிலிப்பாய் சரஸ்வதி ஆலயத்தின் வாசுதேவ குருக்கள் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,எதிர்வரும் 30 ஆம் திகதி வருகின்ற ஆடி மாதம் மூல நட்சத்திலேயே சர்ஸ்தி அம்பாளுக்கு மாணவர்களது கல்வி வளர்ச்சிக்காகவும், இளையவர்களது நல் ஒழுக்க விழுமியங்கள் உயர்வடைவதற்காகவும், சைவ தமிழ் கலாசாராம் பேணப்படுவதற்காகவும் மிக பிரமாண்டமான பிராத்தனை நிகழ்வு நடைபெற இருக்கின்றது.இந்த அற்புதமான நிகழ்வினை இலங்கை வரலாற்றிலேயே முதன்மையுறச் செய்யும் வகையில் 108 சிவாச்சாரியார்கள் 108 கோம் குண்டங்களிலேயே ஆகுதிகள் வளர்க்கப்பட இருக்கிறது.சரஸ்வதி தேவியினுடைய திவ்வியமான மந்திரங்களை எல்லாம் உச்சாடனம் செய்வதோடு மாணவர்கள், இளையவர்கள் மற்றும் பெரியவர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து சரஸ்வதி அம்பாளுடைய பாசுரங்களையும் கவச மந்திரங்களையும் நல்லாம் பாராயணம் செய்ய இந்த அற்புதமான நிகழ்வுகள் நடைபெற உள்ளது.இவ்வாறு சிறப்புமிக்க இப்பிரார்த்தனை நிகழ்வில் இளையவர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று சரஸ்வதி அம்பாளின் திருவருளுக்கு பாத்திரமாகுமாறு கேட்டுக்கொள்வதோடு, கடந்த மாதத்தில் இருந்து இந்த பிரார்த்தனையை வலுச்சேர்ப்பதற்காக ஒவ்வொரு இல்லத்திலும் மாணவர்கள் தங்கள் தங்கள் பிரார்தனைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.இப்பிரார்த்தனையில் இணைந்து கொள்ளாதவர்கள் அந்த பிரார்த்தனை மந்திரங்களை பிரார்த்தனை திரவ்வியங்களை ஆலயத்திலேயே பெற்று பிரார்த்தனையில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.எதிர்வரும் 30ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 08.00 மணிக்கு கோம ஆராதனைகள் மிக சிறப்பாக நடைபெற இருக்கின்றது.அடியவர்களும் அனைவரும் ஒன்று சேர்ந்து நல்லதொரு சமூகத்தை உருவாக்க பிரார்த்தனை செய்து கொள்ள அனைவரையும் பங்கேற்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement