• May 01 2024

புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் கடத்தல்காரர்கள் குழு...!

Sharmi / Apr 18th 2024, 3:07 pm
image

Advertisement

கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது.

கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக நேற்று இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் கடத்தல்காரர்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களே என கொழும்பு மாநகரசபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்தார்.

கடத்தல்காரர்கள், கடைகளை தினசரி வாடகைக்கு வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார். சட்டவிரோத கட்டுமானம் குறித்து முதன்முறையாக முறைப்பாடு கிடைத்தால் அதனை அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.

எனவே இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்களுக்கு இரையாகி பணத்தை வீணடிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றன.

அனுமதி பெறாத கடைகளை அகற்றும் முன், கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் திகதி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டது. அதனையடுத்து, கடந்த ஜனவரி 2ஆம் திகதி அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் 14 நாட்களுக்குள் கடைகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபை எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது.

பல தடவைகள் இந்த கடைகளின் உரிமையாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிடுகின்றன.

ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படாததால் கடந்த 16, 17 ஆகிய இரு தினங்களில் இந்த அனுமதியற்ற கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொறியாளர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இந்த கடைகளை அவற்றிலிருந்து அகற்றுவதற்கு நகர சபையினால் செலவிடப்படும் பணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்தார்.

கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, இந்த இடத்தில் 73 சட்டவிரோத கடைகள் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 2013 ஆம் ஆண்டும் அகற்றப்பட்டு, கொழும்பு பஸ்தியன் மாவத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் அகற்றப்பட்டு அதனை கவர்ச்சிகரமான முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம்  மகிந்த விதானாராச்சி தெரிவித்தார்.

பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மகிந்த விதானாராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு இந்த இடத்தில் கட்டப்பட்ட சட்டவிரோதக் கடைகளை நாங்கள் அகற்றிய பின்னர், கடந்த கோவிட் மற்றும் போராட்டத்தின் போது சில ஒழுங்கமைக்கப்பட்ட நபர்கள் வெவ்வேறு காலங்களில் மிதக்கும் சந்தையின் முன் கடைகளைக் கட்டியுள்ளனர். அவர்களை அந்த இடத்தை விட்டு செல்லுமாறு அறிவித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லாததன் காரணத்தினால்

இந்த கடைகளை அகற்றுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை கொழும்பு மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்தது.

கொழும்பு மெனிங் சந்தையில் மாத்திரம் 231 அனுமதியற்ற கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடைகளை அகற்றுவதை ஏற்றுக்கொண்ட போதிலும், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கடைகளை அகற்றுவது குறித்து ஆலோசிக்க உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு மிதக்கும் சந்தை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.சி.பிரியசாந்த தெரிவித்தார். ஆனால் இந்த திட்டத்தின் மதிப்பு குறித்து அடிப்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றார்.

மேலும், இந்த சந்தை வளாகத்தை அகற்றியதற்கும், மிதக்கும் வணிக வளாகத்தை ஜப்பானிடம் ஒப்படைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

மக்கள் நினைக்கும் வகையில் அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும், இந்த அனுமதியற்ற கட்டுமானங்களை ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் அநியாயமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் எனவும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் கடத்தல்காரர்கள் குழு. கொழும்பு புறக்கோட்டையில் அனுமதியற்ற விதத்தில் கடைகளை நிர்மாணிப்பதன் பின்னணியில் ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் குழுவொன்று இருப்பதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை வெளிப்படுத்தியுள்ளது.கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக நேற்று இடிக்கப்பட்டுள்ள 21 கடைகளும் கடத்தல்காரர்களால் கட்டப்பட்ட சட்டவிரோத கட்டுமானங்களே என கொழும்பு மாநகரசபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்தார்.கடத்தல்காரர்கள், கடைகளை தினசரி வாடகைக்கு வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார். சட்டவிரோத கட்டுமானம் குறித்து முதன்முறையாக முறைப்பாடு கிடைத்தால் அதனை அகற்றுவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறினார்.எனவே இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்களுக்கு இரையாகி பணத்தை வீணடிக்க வேண்டாம் என கொழும்பு மாநகர சபையும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றன.அனுமதி பெறாத கடைகளை அகற்றும் முன், கடை உரிமையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முதல் அறிவிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் 20ம் திகதி நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் வெளியிடப்பட்டது. அதனையடுத்து, கடந்த ஜனவரி 2ஆம் திகதி அனைத்து கடை உரிமையாளர்களுக்கும் 14 நாட்களுக்குள் கடைகளை அகற்றுமாறு கொழும்பு மாநகர சபை எழுத்து மூலம் அறிவித்தல் விடுத்துள்ளது. பல தடவைகள் இந்த கடைகளின் உரிமையாளர்களை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு வாய்மொழி அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக கொழும்பு மாநகர சபை மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிடுகின்றன.ஆனால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அகற்றப்படாததால் கடந்த 16, 17 ஆகிய இரு தினங்களில் இந்த அனுமதியற்ற கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொறியாளர் தெரிவித்தார்.எதிர்காலத்தில் இந்த கடைகளை அவற்றிலிருந்து அகற்றுவதற்கு நகர சபையினால் செலவிடப்படும் பணத்தை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு மாநகர சபையின் நகர அழகுபடுத்தல் திட்ட இணைப்பாளர் பொறியியலாளர் குமுது போகஹவத்த தெரிவித்தார்.கொழும்பு மிதக்கும் சந்தைக்கு முன்பாக உள்ள கடைகளை அகற்றுவது தொடர்பில் ஊடகங்களுக்கு அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது, இந்த இடத்தில் 73 சட்டவிரோத கடைகள் கட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 2013 ஆம் ஆண்டும் அகற்றப்பட்டு, கொழும்பு பஸ்தியன் மாவத்தை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் அகற்றப்பட்டு அதனை கவர்ச்சிகரமான முறையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம்  மகிந்த விதானாராச்சி தெரிவித்தார்.பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் கேட்போர் கூடத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மகிந்த விதானாராச்சி மேற்கண்டவாறு தெரிவித்தார்.கடந்த 2013ஆம் ஆண்டு இந்த இடத்தில் கட்டப்பட்ட சட்டவிரோதக் கடைகளை நாங்கள் அகற்றிய பின்னர், கடந்த கோவிட் மற்றும் போராட்டத்தின் போது சில ஒழுங்கமைக்கப்பட்ட நபர்கள் வெவ்வேறு காலங்களில் மிதக்கும் சந்தையின் முன் கடைகளைக் கட்டியுள்ளனர். அவர்களை அந்த இடத்தை விட்டு செல்லுமாறு அறிவித்தும் அவர்கள் அங்கிருந்து செல்லாததன் காரணத்தினால்இந்த கடைகளை அகற்றுமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை கொழும்பு மாநகர சபையிடம் கோரிக்கை விடுத்தது.கொழும்பு மெனிங் சந்தையில் மாத்திரம் 231 அனுமதியற்ற கடைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். கடைகளை அகற்றுவதை ஏற்றுக்கொண்ட போதிலும், கொழும்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் கடைகளை அகற்றுவது குறித்து ஆலோசிக்க உப குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேலதிக பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதானாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.கொழும்பு மிதக்கும் சந்தை ஜப்பானிய முதலீட்டாளர் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள போதிலும், இது தொடர்பில் இதுவரை இணக்கப்பாடு எட்டப்படவில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஈ.ஏ.சி.பிரியசாந்த தெரிவித்தார். ஆனால் இந்த திட்டத்தின் மதிப்பு குறித்து அடிப்படை புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது என்றார்.மேலும், இந்த சந்தை வளாகத்தை அகற்றியதற்கும், மிதக்கும் வணிக வளாகத்தை ஜப்பானிடம் ஒப்படைப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.மக்கள் நினைக்கும் வகையில் அனுமதியற்ற கட்டுமானங்களை மேற்கொள்ள சட்டத்திற்கு எந்த உரிமையும் இல்லை எனவும், இந்த அனுமதியற்ற கட்டுமானங்களை ஒழுங்கமைக்கப்பட்ட கடத்தல்காரர்கள் அநியாயமாக பயன்படுத்திக் கொள்கின்றனர் எனவும் பிரதிப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement