• May 17 2024

மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்பு...!

Sharmi / Apr 30th 2024, 4:10 pm
image

Advertisement

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில்  14 ஆயிரத்து 570 மில்லி கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்தார்

மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று(30) அதிகாலை 5 மணி யளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் கீழ்ப்பகுதியில் மறைத்து வைத்து மேற்படி ஐஸ் போதைப் பொருள் எடுத்துவரப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

காத்தான்குடி மையவாடி வீதி மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல மென்பானம் ஒன்றின் காத்தான்குடி பிரதேச முகவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ் போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது

இதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்கள் மீட்பு. மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரதேசத்தில்  14 ஆயிரத்து 570 மில்லி கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்தார்மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து இன்று(30) அதிகாலை 5 மணி யளவில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் கீழ்ப்பகுதியில் மறைத்து வைத்து மேற்படி ஐஸ் போதைப் பொருள் எடுத்துவரப்பட்ட நிலையில் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்காத்தான்குடி மையவாடி வீதி மற்றும் காத்தான்குடி ஆறாம் குறிச்சி பிரதேசங்களை சேர்ந்த நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் பிரபல மென்பானம் ஒன்றின் காத்தான்குடி பிரதேச முகவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஐஸ் போதை பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன், கடத்தலுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளதுஇதேவேளை கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement