• Nov 24 2024

அம்பாறையில் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றுக்கு இராணுவத்தால் வீடு அமைப்பு...!

Sharmi / May 2nd 2024, 4:02 pm
image

பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு  முகாம்  இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று(02)  நாட்டப்பட்டுள்ளது.

 இலங்கை  இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின்  கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் அனில் பெரேராவின்   ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி  கேணல் தனிக பதிரட்ன  வழிகாட்டலில் அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின்  ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு -1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் குறித்த வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக   241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி  கேணல் தனிக பதிரட்னவினால்  இன்று  அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

மேலும் இந்நிகழ்வில் அம்பாறை  கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் களுஆராச்சி உள்ளிட்ட  அதிகாரிகளும்  கலந்து சிறப்பித்திருந்தனர்.

இது தவிர  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர்  மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் அமலதாசன் , கிராம உத்தியோகத்தர் சுந்தரராஜன் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.


அம்பாறையில் பெண் தலைமைத்துவ குடும்பமொன்றுக்கு இராணுவத்தால் வீடு அமைப்பு. பெண் தலைமை தாங்கும் குடும்பம் ஒன்றிற்கு கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவு  முகாம்  இராணுவத்தினரால் வீடொன்று நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் இன்று(02)  நாட்டப்பட்டுள்ளது. இலங்கை  இராணுவத்தின் 24 வது காலாட்படை பிரிவின்  கட்டளைத் தளபதி  மேஜர் ஜெனரல் அனில் பெரேராவின்   ஆலோசனைக்கமைய 241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி  கேணல் தனிக பதிரட்ன  வழிகாட்டலில் அம்பாறை கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின்  ஏற்பாட்டில்  அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு -1 கிராம உத்தியோகத்தர் பிரிவில் குறித்த வீட்டிற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.இந் நிகழ்விற்கு பிரதம விருந்தினராக   241 இராணுவ பிரிவின் கட்டளை அதிகாரி  கேணல் தனிக பதிரட்னவினால்  இன்று  அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.மேலும் இந்நிகழ்வில் அம்பாறை  கல்முனை 18 ஆவது விஜயபாகு காலாட் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் களுஆராச்சி உள்ளிட்ட  அதிகாரிகளும்  கலந்து சிறப்பித்திருந்தனர்.இது தவிர  கல்முனை தலைமையக  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர்  மற்றும் நிர்வாக கிராம உத்தியோகத்தர் அமலதாசன் , கிராம உத்தியோகத்தர் சுந்தரராஜன் மற்றும் கல்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement