• Nov 22 2025

கடுகன்னாவில் பாரிய கல்லுடன், சரிந்து விழுந்த மண்மேடு; ஒருவர் பலி; நான்கு பேர் காயம்

Chithra / Nov 22nd 2025, 10:41 am
image

 

கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று காலை ஒரு விற்பனை நிலையம் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. 


இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். 


காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 


இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளது. 


இந்த அனர்த்தம் காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.


குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

கடுகன்னாவில் பாரிய கல்லுடன், சரிந்து விழுந்த மண்மேடு; ஒருவர் பலி; நான்கு பேர் காயம்  கண்டி - கொழும்பு பிரதான வீதியில், பஹல கடுகன்னாவ பகுதியில் இன்று காலை ஒரு விற்பனை நிலையம் மீது பாரிய கல்லுடன், மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. இந்த அனர்த்தத்தில், அந்த விற்பனை நிலையத்தில் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், நான்கு பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மாவனெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில நபர்கள் இந்த இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களை மீட்கும் நடவடிக்கையை அனர்த்த முகாமைத்துவ நிலையம் தற்போது ஆரம்பித்துள்ளது. இந்த அனர்த்தம் காரணமாக, கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகன்னாவ பகுதியில் போக்குவரத்து தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.குறிப்பாக, கனேதென்ன பிரதேசத்தில் மலையிலிருந்து பாறைகள் வீழ்ந்துள்ளதால், பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தற்போது நிலவும் ஆபத்தான சூழலைக் கருத்தில் கொண்டு, இவ்வீதியை பயன்படுத்தும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், இயன்றவரை மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement