• May 17 2024

கப்பலில் நடத்தப்பட்ட ஆடம்பர விருந்து..! மறுக்கும் மொட்டு எம்.பி.

Chithra / Jan 13th 2024, 8:51 am
image

Advertisement

 

அண்மையில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஆடம்பரமான இரவு விருந்து என்ற செய்தியை இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மறுத்துள்ளார்.

இது கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்ட ஆய்வுப் பயணம் மாத்திரமே என்று சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஒரு உண்மையான விருந்தை நடத்த விரும்பினால், தாங்கள் அதை ஒரு ஆடம்பரமான கப்பலில் ஏற்பாடு செய்திருக்கலாம். ஒரு அகழ்வாராய்ச்சி கப்பலில் அல்ல என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு தளங்களை ஆய்வு செய்வதுடன் துறைமுகப் பகுதியில் உள்ள அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க விரும்பினர்.

இதனையடுத்து பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இந்த சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தார் என்று சனத் நிசாந்த தெரிவித்துள்ளார். 

கப்பலில் நடத்தப்பட்ட ஆடம்பர விருந்து. மறுக்கும் மொட்டு எம்.பி.  அண்மையில் இலங்கை துறைமுக அதிகாரசபையினால் கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஆடம்பரமான இரவு விருந்து என்ற செய்தியை இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த மறுத்துள்ளார்.இது கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தித் திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்ட ஆய்வுப் பயணம் மாத்திரமே என்று சனத் நிசாந்த தெரிவித்துள்ளார்.அத்துடன் ஒரு உண்மையான விருந்தை நடத்த விரும்பினால், தாங்கள் அதை ஒரு ஆடம்பரமான கப்பலில் ஏற்பாடு செய்திருக்கலாம். ஒரு அகழ்வாராய்ச்சி கப்பலில் அல்ல என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள், துறைமுகத்தின் கிழக்கு மற்றும் மேற்கு தளங்களை ஆய்வு செய்வதுடன் துறைமுகப் பகுதியில் உள்ள அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளின் முன்னேற்றத்தை கண்காணிக்க விரும்பினர்.இதனையடுத்து பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகர இந்த சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்தார் என்று சனத் நிசாந்த தெரிவித்துள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement