• May 20 2024

பாம்புகளுடன் பயமின்றி புகுந்து விளையாடும் சிங்கப்பெண் - பாம்புகளின் ராணியை பின்தொடரும் ரசிகர் பட்டாளம்..!samugammedia

Sharmi / May 2nd 2023, 1:53 pm
image

Advertisement

இளம் பெண் ஒருவர் எந்த விதமான பயமுமின்றி மலைப்பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது.

மியான்மாரை சேர்ந்த ஷ்வே லீ என்ற இளம் பெண்ணே இந்த வேலையினை செய்து வருகின்றார்.



அவர் தனது குழுவினரோடு  சேர்ந்து மலைப்பாம்புகளை பிடித்து கோணிப்பைகளில் அடைத்து வனப்பகுதியில் விடும் பணியை மேற்கொண்டு வருகிறார்.

குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் பாம்புகளையே அவ்வாறு  மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று  விடுகின்றார்.

இதனால் இவரை அனைவரும் பாம்புகளின் ராணி என்று அழைக்கின்றனர்.



குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு நுழைந்து விட்டதாக  ஷ்வே லீ அழைப்பு வந்தவுடன் தனது குழுவினருடன் சென்று மலைப் பாம்புகளை சர்வசாதாரணமாக பிடித்து கோணிப்பையில் அடைத்து சென்று விடுகின்றார்.

அந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் 200 பாம்புகளைப் பிடித்துள்ள ஷ்வே லீயின் பாம்பு பிடிக்கும் குழு பாம்புகளை தங்கள் சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்ற பின்னர் வனப்பகுதியில் விடுகின்றனர்.

மலைப்பாம்புகள் மட்டுமின்றி கொடிய விஷமுள்ள ராஜ நாகம், கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகளையும் சாதாரணமாக  பிடிக்கும் இவரது குழுவுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளதாம்.


பாம்புகளுடன் பயமின்றி புகுந்து விளையாடும் சிங்கப்பெண் - பாம்புகளின் ராணியை பின்தொடரும் ரசிகர் பட்டாளம்.samugammedia இளம் பெண் ஒருவர் எந்த விதமான பயமுமின்றி மலைப்பாம்புகளை பிடித்து வனப்பகுதியில் விடும் சம்பவம் அனைவரையும் பதற வைத்துள்ளது. மியான்மாரை சேர்ந்த ஷ்வே லீ என்ற இளம் பெண்ணே இந்த வேலையினை செய்து வருகின்றார். அவர் தனது குழுவினரோடு  சேர்ந்து மலைப்பாம்புகளை பிடித்து கோணிப்பைகளில் அடைத்து வனப்பகுதியில் விடும் பணியை மேற்கொண்டு வருகிறார்.குடியிருப்பு பகுதிக்குள் நுழையும் பாம்புகளையே அவ்வாறு  மீட்டு வனப்பகுதியில் கொண்டு சென்று  விடுகின்றார். இதனால் இவரை அனைவரும் பாம்புகளின் ராணி என்று அழைக்கின்றனர். குடியிருப்பு பகுதிக்குள் பாம்பு நுழைந்து விட்டதாக  ஷ்வே லீ அழைப்பு வந்தவுடன் தனது குழுவினருடன் சென்று மலைப் பாம்புகளை சர்வசாதாரணமாக பிடித்து கோணிப்பையில் அடைத்து சென்று விடுகின்றார். அந்த வகையில், கடந்த ஆண்டு மட்டும் 200 பாம்புகளைப் பிடித்துள்ள ஷ்வே லீயின் பாம்பு பிடிக்கும் குழு பாம்புகளை தங்கள் சேமிப்பு மையத்திற்கு கொண்டு சென்ற பின்னர் வனப்பகுதியில் விடுகின்றனர்.மலைப்பாம்புகள் மட்டுமின்றி கொடிய விஷமுள்ள ராஜ நாகம், கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகளையும் சாதாரணமாக  பிடிக்கும் இவரது குழுவுக்கு ரசிகர் பட்டாளமே உள்ளதாம்.

Advertisement

Advertisement

Advertisement