• Jul 09 2025

நீண்ட கால பகை; தேவாலயத்தின் மீது கல் வீச்சு தாக்குதல்! நால்வர் வைத்தியசாலையில்!

Chithra / Jul 8th 2025, 1:21 pm
image



பதுளை , மீகஹகிவுல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது

இந்த தாக்குதலின் போது தேவாலயத்தில் இருந்த பூசாரி, பூசாரியின் மனைவி, சிறுவன் மற்றும் பெண் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேவாலய உரிமையாளருக்கும் அயல் வீட்டவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், இதற்கு முன்னரும் பல தடவைகள் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நீண்ட கால பகை; தேவாலயத்தின் மீது கல் வீச்சு தாக்குதல் நால்வர் வைத்தியசாலையில் பதுளை , மீகஹகிவுல பிரதேசத்தில் உள்ள தேவாலயம் ஒன்றின் மீது இனந்தெரியாத நபர்கள் சிலர் கல் வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளதாக கந்தகெட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதுஇந்த தாக்குதலின் போது தேவாலயத்தில் இருந்த பூசாரி, பூசாரியின் மனைவி, சிறுவன் மற்றும் பெண் ஒருவர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தேவாலய உரிமையாளருக்கும் அயல் வீட்டவர்களுக்கும் இடையில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ள நிலையில், இதற்கு முன்னரும் பல தடவைகள் தேவாலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement