• Jan 26 2025

புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது!

Tharmini / Jan 23rd 2025, 1:06 pm
image

வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன், சந்தேக நபர் ஒருவர் கைது புத்தளம் - பாலாவி பகுதியில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடையவர் எனவும் இவர் புத்தளம் - பாலாவி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாலாவி விமானப் படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் விஷேட அதிரடிப் படையினர்  பாலாவி பிரதேசத்தில் நேற்று (22) மாலை மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 15800 வெளிநாட்டு சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த 15800 வெளிநாட்டு சிகரட்களை சந்தேக நபர் 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும், இதன்போது விஷேட அதிரடிப் படையினர் முகவர்களை நியமித்து வெளிநாட்டு சிகரட்களை கொள்வனவு செய்யும் போர்வையில் மக்களை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.


புத்தளத்தில் வெளிநாட்டு சிகரட்களுடன் ஒருவர் கைது வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருதொகை வெளிநாட்டு சிகரட்களுடன், சந்தேக நபர் ஒருவர் கைது புத்தளம் - பாலாவி பகுதியில் நேற்று (22) கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 40 வயதுடையவர் எனவும் இவர் புத்தளம் - பாலாவி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.பாலாவி விமானப் படை புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில், புத்தளம் விஷேட அதிரடிப் படையினர்  பாலாவி பிரதேசத்தில் நேற்று (22) மாலை மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 15800 வெளிநாட்டு சிகரட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த 15800 வெளிநாட்டு சிகரட்களை சந்தேக நபர் 20 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சி செய்ததாகவும், இதன்போது விஷேட அதிரடிப் படையினர் முகவர்களை நியமித்து வெளிநாட்டு சிகரட்களை கொள்வனவு செய்யும் போர்வையில் மக்களை சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement