• May 19 2024

கச்சதீவில் திடீரென முளைத்த பாரிய பௌத்தவிகாரை! SamugamMedia

Tamil nila / Mar 24th 2023, 8:25 pm
image

Advertisement

கச்சதீவில் மர்மமான முறையில் கடற் படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.




கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தங்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.



குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் சிறிலங்கா படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.



இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது, பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.



மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.



இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது எனவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பிடத்தக்கது .

இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்க பட்டிருக்கிறது .



ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.



அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகள் பாவித்தும் பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தள்ளன.


அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ மற்றும் ஊடகவியலாளர்களையோ குறித்த இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை.


இதேவேளை, கச்சதீவு பகுதியில், கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன. ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டுவந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் என்பதும் அப்பட்டமாகத் தெரிவிகின்ற ஒரு விடயம்.


“கச்சத்தீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.


இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது,  பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும்,  இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.


ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


 கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.


இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருவதைப் அபோன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.



கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது. ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.

கச்சதீவில் திடீரென முளைத்த பாரிய பௌத்தவிகாரை SamugamMedia கச்சதீவில் மர்மமான முறையில் கடற் படையினரால் பாரிய பௌத்த விகாரையொன்று கட்டப்பட்டு, இரகசியமான முறையில் பௌத்தமயமாக்கல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தற்போத பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது.கச்சதீவு இலங்கை இந்திய பக்தர்கள் வருடம் தோறும் ஒன்று கூடி அந்தோனியாரை வழிபட்டு செல்லும் ஒரு புனித பூமியாக காணப்படும் நிலையில், தங்போது, அங்கு இரகசியமாக புத்தர் சிலை வைத்து பொளத்தமயமாக்கல் தீவிரமாக இடம்பெற்று வருகின்றமை இந்திய இலங்கை உறவில் விரிசலை ஏற்படுத்த கூடும் எனவும் சமூக ஆர்வலர்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மயமாக்கலை முன்னெடுக்கும் சிறிலங்கா படையினர் கச்சத்தீவையும் விட்டுவைக்காது அங்கேயும் பாரிய புத்தர் சிலையொன்றை பிரதிஸ்டை செய்துள்ளார்கள்.இவ்வாறான நிலையில், இது வரை காலமும் இந்திய இலங்கை பக்தர்கள் மட்டுமே திருவிழாவில் கலந்து கொண்டிருந்த நிலையில், இந்த வருடம் புதிதாக பௌத்த பிக்குகள் குழு ஒன்றும் கச்சதீவிற்கு சென்றிருந்தைமையும் தற்போது, பலத்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.மேலும் கச்சதீவில் 5 முதல் 10 கடற்படையினரே கடமையில் இருக்கின்ற நிலையில், இவ்வாறு பிரமாண்டமாக புத்தர் சிலை கட்டிருப்பது சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்திய இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையில் கச்சதீவில் அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், அதனைத் தவிர நிரந்தரமான கட்டடங்கள் எவையும் அமைக்க கூடாது எனவும் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. குறிப்பிடத்தக்கது .இவ்வாறான நிலையில், அங்கு கடற்படையினருக்கான இருப்பிடம் கூட நிலையானதாக அமைக்க பட்டிருக்கிறது .ஒப்பந்த யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம். ஆனால் அந்த ஒப்பந்தத்தையும் மீறி தற்போது நிரந்தரமான பௌத்தமயமாக்கலுக்கான ஒரு திட்டமாக பாரியளவில் புத்தர் சிலை ஒன்று இரகசியமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.அதுமட்டுமன்றி, அந்த புத்தர் சிலை அமைக்கப்பட்டுள்ள பகுதியை சூழ மிக உயரமான கம்பிகள் பாவித்தும் பனை ஓலை வேலி அமைத்து மிக மிக இரகசியமாக கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தள்ளன.அண்மையில் நடைபெற்ற திருவிழாவின் போதும் அங்கு சென்ற கிறிஸ்தவ மதகுருமாரையோ, பக்தர்களையோ மற்றும் ஊடகவியலாளர்களையோ குறித்த இடத்திற்கு அருகில் கூட செல்ல கடற்படையினர் அனுமதி வழங்கவில்லை.இதேவேளை, கச்சதீவு பகுதியில், கடற்கரையை சூழவும் காட்டு மரங்களே வளர்ந்திருந்தன. ஆனால் தற்போது, கடற்படையினர் அரச மரங்களை கொண்டுவந்து குறித்த பகுதியில் வைத்துள்ளனர் என்பதும் அப்பட்டமாகத் தெரிவிகின்ற ஒரு விடயம்.“கச்சத்தீவு சிறிலங்கா கடற்படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றது. கச்சத்தீவை இந்தியா, இலங்கைக்கு வழங்கும் போது அந்தோனியார் ஆலயத்துடனேயே வழங்கியது.இவ்வாறான நிலையில், இலங்கை பொருளாதார ரீதியாக அதளபாதாளத்திற்கு சென்று கொண்டிருந்த போது,  பொருளாதார வீழ்ச்சியில் இருந்து மீள்வதற்கு, சர்வதேச நாடுகள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியுள்ள போதும்,  இந்தியா வழங்கிய ஒத்துழைப்பை ஒருபோதும் மறுக்கவோ, மறக்கவோ முடியாது.ஆகவே இவ்வாறான சிறுமைத்தனமான செயற்பாடுகள் இலங்கை இந்திய நல்லுறவில் பாரிய விரிசலாக உருவெடுக்கும் சந்தர்ப்பங்களும் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கச்சத்தீவில் அந்தோனியார் ஆலயம் மாத்திரமே இவ்வளவு காலமாக இருந்தது. ஆனால் இப்போது அங்கே பெரிய புத்தர் சிலை எப்படி வந்தது என்பது விடைகாண முடியாத கேள்வியாகவுள்ளது.இலங்கையில் இருப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இருப்பவர்களுக்கும் கச்சதீவு அந்தோனியார் ஆலயத்திற்கு உரிய இடமென்று தெரியும். இருப்பினும் வடக்கு மற்றும் கிழக்கில் பௌத்த அடையாளங்களை நிறுவிவருவதைப் அபோன்று கச்சதீவிலும் தற்போது பௌத்த சின்னத்தை நிறுவியுள்ளனர்.கச்சத்தீவையும் விட்டுவைக்காத நிலைமையே தற்போது இருக்கின்றது. ஆனால் கடற்படையினர் வழிபடுவதற்காக அது வைக்கப்பட்டது என்று இனி வரும் காலங்களில் பதில் வரலாம்.

Advertisement

Advertisement

Advertisement