• Nov 24 2024

கிழக்கில் திடீரென வீசிய மினி சூறாவளி..! தூக்கி வீசப்பட்ட மீன்பிடி படகுகள்..!

Chithra / Jan 6th 2024, 1:10 pm
image

 

மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் நேற்று  (5) இரவு வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது.

இதில் 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்தார். 

வாகரை காயங்கேணி கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடி இயந்திர படகுகளை  நிறுத்திவைத்திருந்த நிலையில், 

நேற்றிரவு திடீரென வீசிய மினி சூறாவளி காற்று படகுகளை தூக்கி வீசியதில் 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் தேசமடைந்துள்ளன.

அதேவேளை கடந்த வாரம் சீரற்ற காலநிலையால் பெய்துவந்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தினால் கல்லரிப்பு பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து, அந்த பிரதேசத்துக்கு உழவு இயந்திரம் மற்றும் படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் கதிரவெளி கனிஸ்ட வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது குறித்த பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீர் வழிந்தோடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


கிழக்கில் திடீரென வீசிய மினி சூறாவளி. தூக்கி வீசப்பட்ட மீன்பிடி படகுகள்.  மட்டக்களப்பு - வாகரை பிரதேசத்தில் நேற்று  (5) இரவு வீசிய மினி சூறாவளியால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள் தூக்கி வீசப்பட்டுள்ளது.இதில் 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் சேதமடைந்துள்ளதாக வாகரை பிரதேச செயலாளர் க.அருணன் தெரிவித்தார். வாகரை காயங்கேணி கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடி இயந்திர படகுகளை  நிறுத்திவைத்திருந்த நிலையில், நேற்றிரவு திடீரென வீசிய மினி சூறாவளி காற்று படகுகளை தூக்கி வீசியதில் 6 படகுகள், 3 எஞ்ஜின்கள் தேசமடைந்துள்ளன.அதேவேளை கடந்த வாரம் சீரற்ற காலநிலையால் பெய்துவந்த கடும் மழை காரணமாக ஏற்பட்ட ஆற்று வெள்ளத்தினால் கல்லரிப்பு பிரதேசத்துக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டதையடுத்து, அந்த பிரதேசத்துக்கு உழவு இயந்திரம் மற்றும் படகு சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்த 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தொடர்ந்தும் கதிரவெளி கனிஸ்ட வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது குறித்த பகுதியில் தேங்கியுள்ள வெள்ள நீர் வழிந்தோடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement