• Apr 26 2024

யாழில் புதிய நிகழ்ச்சி திட்டம் - இளைஞர் யுவதிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு! அமைச்சரின் அறிவிப்பு

Chithra / Dec 23rd 2022, 2:53 pm
image

Advertisement

Glocal Fair-2023 நிகழ்ச்சி திட்டம் அடுத்த வருடம் முதல் காலாண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளதென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

Glocal Fair-2023 தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கூறுகையில், 

Glocal Fair-2022 நிகழ்ச்சிக்காக காலிக்குச் சென்று நாம் காலியில் உள்ள இளைஞர் யுவதிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளோம்.

தொழிலாளர் மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட தொழிற்துறையில் ஏற்படக்கூடிய சகல விடயங்கள் தொடர்பாகவும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தோம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கடன் வழங்கல், பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் , மனிதவள முகாமைத்துவம் , தொழிற் சந்தை தொடர்பாகவும் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் ஓரிடத்தில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் ஓர் செயல் திட்டத்தை Glocal Fair என்ற பெயரில் நாம் காலியிலிருந்து ஆரம்பித்தோம்.


நாம் இவ்வாறு காலியிலிருந்து ஆரம்பித்த இச்செயற்திட்டத்தின் அனுபவங்களுடன் அடுத்த கட்டமாக Glocal Fair 2023 இன் முதலாவது நிகழ்ச்சித் திட்டத்தை யாழ் நகரில் நடாத்த எதிர்பார்க்கின்றோம்.

இங்கு சர்வதேச தொழிற் சந்தையை அறிமுகப்படுத்தல், தொழிலாளர் பிரச்சினைகளுக்கான தீர்வு உட்பட கொழும்பை மையமாகக் கொண்டிருக்கும் அனைத்து சேவைகளையும் வடக்கே பிரதான நகரமான யாழ்ப்பாணததில் பெற்றுக்கொடுக்கவும், அக்கால கட்டத்தினுள் முன்வைக்கப்படும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.

இதற்காக சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச தொழில் நிறுவனங்கள், பரந்துபட்ட இடப்பரப்பு, பரவலான வாய்ப்புக்கள் மற்றும் வசதிகள் பலவற்றை பெற்றக்கொடுத்தல்.

விஷேடமாக இக்காலகட்டத்தில் தலையெடுத்திருக்கும் வெளிநாடு அனுப்புதலில் ஈடுபட்டிருக்கும் ஏமாற்றுக்காரர்கள் தொடர்பான விடயங்கள், நேர்மையான முறையில் வெளிநாடு செல்வது தொடர்பான அறிவூட்டல் உள்ளிட்ட வடக்கில் வாழும் மக்களுக்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை தெற்கில் வாழும் மக்களின் ஆதரவுடன் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.

எனவே தான் வடக்கில் வாழும் எமது மக்களுக்கு எமது உண்மையான அன்பு பாசத்தை வெளிக்காட்டும் வகையில் தெற்கிலிருந்து ஆரம்பித்து வடக்கிற்கு எமது செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டோம்.

நாம் 2023 முதல் காலாண்டிற்குள் இச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.”என கூறியுள்ளார்.      


யாழில் புதிய நிகழ்ச்சி திட்டம் - இளைஞர் யுவதிகளுக்கு ஒரு அரிய வாய்ப்பு அமைச்சரின் அறிவிப்பு Glocal Fair-2023 நிகழ்ச்சி திட்டம் அடுத்த வருடம் முதல் காலாண்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற உள்ளதென அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.Glocal Fair-2023 தொழில் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சின் ஊடாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்களிப்புடன் சர்வதேச மற்றும் உள்நாட்டு வேலைவாய்ப்புகளுக்காக காத்திருக்கும் இளைஞர் யுவதிகளுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு என அமைச்சர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் மேலும் கூறுகையில், Glocal Fair-2022 நிகழ்ச்சிக்காக காலிக்குச் சென்று நாம் காலியில் உள்ள இளைஞர் யுவதிகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு வழியமைத்துக் கொடுத்துள்ளோம்.தொழிலாளர் மற்றும் ஊழியர் சேமலாப நிதி தொடர்பான பிரச்சினைகள் உள்ளிட்ட தொழிற்துறையில் ஏற்படக்கூடிய சகல விடயங்கள் தொடர்பாகவும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுத்தோம்.வெளிநாடுகளுக்குச் செல்லும் போது கடன் வழங்கல், பயிற்சிகளைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல விடயங்கள் , மனிதவள முகாமைத்துவம் , தொழிற் சந்தை தொடர்பாகவும் ஆரம்பம் முதல் இறுதி வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் ஓரிடத்தில் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் ஓர் செயல் திட்டத்தை Glocal Fair என்ற பெயரில் நாம் காலியிலிருந்து ஆரம்பித்தோம்.நாம் இவ்வாறு காலியிலிருந்து ஆரம்பித்த இச்செயற்திட்டத்தின் அனுபவங்களுடன் அடுத்த கட்டமாக Glocal Fair 2023 இன் முதலாவது நிகழ்ச்சித் திட்டத்தை யாழ் நகரில் நடாத்த எதிர்பார்க்கின்றோம்.இங்கு சர்வதேச தொழிற் சந்தையை அறிமுகப்படுத்தல், தொழிலாளர் பிரச்சினைகளுக்கான தீர்வு உட்பட கொழும்பை மையமாகக் கொண்டிருக்கும் அனைத்து சேவைகளையும் வடக்கே பிரதான நகரமான யாழ்ப்பாணததில் பெற்றுக்கொடுக்கவும், அக்கால கட்டத்தினுள் முன்வைக்கப்படும் சகல பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.இதற்காக சர்வதேச ஒழுங்கமைப்புக்கள், சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச தொழில் நிறுவனங்கள், பரந்துபட்ட இடப்பரப்பு, பரவலான வாய்ப்புக்கள் மற்றும் வசதிகள் பலவற்றை பெற்றக்கொடுத்தல்.விஷேடமாக இக்காலகட்டத்தில் தலையெடுத்திருக்கும் வெளிநாடு அனுப்புதலில் ஈடுபட்டிருக்கும் ஏமாற்றுக்காரர்கள் தொடர்பான விடயங்கள், நேர்மையான முறையில் வெளிநாடு செல்வது தொடர்பான அறிவூட்டல் உள்ளிட்ட வடக்கில் வாழும் மக்களுக்குத் தேவைப்படும் ஒத்துழைப்பை தெற்கில் வாழும் மக்களின் ஆதரவுடன் பெற்றுக்கொடுக்க நாம் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்.எனவே தான் வடக்கில் வாழும் எமது மக்களுக்கு எமது உண்மையான அன்பு பாசத்தை வெளிக்காட்டும் வகையில் தெற்கிலிருந்து ஆரம்பித்து வடக்கிற்கு எமது செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டோம்.நாம் 2023 முதல் காலாண்டிற்குள் இச் செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம்.”என கூறியுள்ளார்.      

Advertisement

Advertisement

Advertisement