• Feb 10 2025

தமிழரசுக் கட்சி வழக்கில் புதிய திருப்பம்- ஒக்டோபர் 14 இல் 'விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வு'

Sharmi / Jul 30th 2024, 5:48 pm
image

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கு எதிரான வழக்கில் 'விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வு' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று(30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த வழக்கை விரைந்து முடிவுறுத்துவதற்கு வசதியாக மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய 4 எதிராளிகள் இன்று தமது பதில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.

ஏனைய நான்கு எதிராளிகளான எம்.ஏ.சுமந்திரன், குலநாயகம், ப.சத்தியலிங்கம், இரத்தினவடிவேல் ஆகியோர் சார்பிலான பதில் மனுக்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழரசுக் கட்சி வழக்கில் புதிய திருப்பம்- ஒக்டோபர் 14 இல் 'விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வு' இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவுக்கு எதிரான வழக்கில் 'விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வு' எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ளது.திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் குறித்த வழக்கு இன்று(30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே விளக்கத்துக்கு முன்னரான கலந்தாய்வுக்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, இந்த வழக்கை விரைந்து முடிவுறுத்துவதற்கு வசதியாக மாவை சேனாதிராஜா, சிவஞானம் சிறீதரன், சண்முகம் குகதாசன், சீனித்தம்பி யோகேஸ்வரன் ஆகிய 4 எதிராளிகள் இன்று தமது பதில் மனுக்களைத் தாக்கல் செய்தனர்.ஏனைய நான்கு எதிராளிகளான எம்.ஏ.சுமந்திரன், குலநாயகம், ப.சத்தியலிங்கம், இரத்தினவடிவேல் ஆகியோர் சார்பிலான பதில் மனுக்கள் ஏற்கனவே நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement