• Nov 22 2024

காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி போராடும் தாய்மார்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்த முயற்சி- அமலநாயகி குற்றச்சாட்டு

Sharmi / Jul 30th 2024, 7:03 pm
image

வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடி வரும் அம்மாக்களை பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.

இன்றைய தினம்(30)  மட்டக்களப்பு கல்லடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர் திருமதி அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.

விசாரணைகளின் பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்,

ஊடக சந்திப்புக்களை செய்தமை, பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிரான போராட்டம், மயிலந்தனை மாதவனை பண்ணையாளர் போராட்டத்தில் கலந்து கொண்டமை, பல்கலைக்கழகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நிகழ்வில் கலந்து கொண்டமை, ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை, சர்வதேச பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றமை, புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுகின்றமை, பு.. லி.. களை மீள் உருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

விசாரணையின் போது, 'குற்றச்சாட்டப்பட்டவர்களை விசாரிக்காது, பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கும் முனைப்புடன் அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் செயற்பட்டுவருகின்றன. எமது போராட்டங்களை முடிக்க நினைக்கின்றன.

எமது போராட்டத்தினை எங்களை அச்சுறுத்துவதன் ஊடாக முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைக்கின்றார்கள்.எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் எமது உயிர்கள் போனாலும் எமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி போராடும் தாய்மார்களுக்கு பயங்கரவாத முத்திரை குத்த முயற்சி- அமலநாயகி குற்றச்சாட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி போராடி வரும் அம்மாக்களை பயங்கரவாத முத்திரை குத்தி அவர்களின் போராட்டத்தினை மலினப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.இன்றைய தினம்(30)  மட்டக்களப்பு கல்லடியில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவர் திருமதி அ.அமலநாயகி பயங்கரவாத தடுப்பு பிரிவினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார்.விசாரணைகளின் பின்னர் மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துகளை முன்வைத்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,ஊடக சந்திப்புக்களை செய்தமை, பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு எதிரான போராட்டம், மயிலந்தனை மாதவனை பண்ணையாளர் போராட்டத்தில் கலந்து கொண்டமை, பல்கலைக்கழகத்தில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நிகழ்வில் கலந்து கொண்டமை, ஐக்கிய நாடுகள் சபையில், இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்தமை, சர்வதேச பெண்கள் அமைப்புக்களுடன் தொடர்புகளை பேணுகின்றமை, புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்புகளை பேணுகின்றமை, பு. லி. களை மீள் உருவாக்குதல் போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் முன்வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.விசாரணையின் போது, 'குற்றச்சாட்டப்பட்டவர்களை விசாரிக்காது, பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தும் விதமாக, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்கும் முனைப்புடன் அரச புலனாய்வு கட்டமைப்புக்கள் செயற்பட்டுவருகின்றன. எமது போராட்டங்களை முடிக்க நினைக்கின்றன.எமது போராட்டத்தினை எங்களை அச்சுறுத்துவதன் ஊடாக முடிவுக்கு கொண்டுவரலாம் என்று நினைக்கின்றார்கள்.எங்களுக்கு நீதி கிடைக்கும் வரையில் எமது உயிர்கள் போனாலும் எமது போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement