பூங்கா ஒன்றில் 40 பேருடன் சுழன்று கொண்டிருந்த ராட்டினம் திடீரென தரையில் விழுந்து நொருங்கியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த பயங்கர சம்பவம் சவூதி அரேபியாவின் தாயிஃப் அருகே உள்ள ஹடா பகுதியில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் கடந்த புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
சவுதி அரேபியாவின் ‘360 டிகிரிஸ்’ என்ற பிரபல ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென பல மீற்றர் உயரத்திலிருந்து தரையில் விழும் காட்சி காணொளியாக வெளிவந்து அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது.
‘360 டிகிரிஸ்’ ராட்டினம் செயல்பாட்டில் இருந்தபோது திடீரென சுழன்றடித்து தரையில் விழுந்து நொருங்கியுள்ளது.
ராட்டினம் விபத்திற்குள்ளான போது ராட்டினத்தில் சுமார் 40 பேர் பயணித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பயணிகளுடன் சுழன்று கொண்டிருந்த ராட்டினம் திடீரென வேகம் அதிகரித்து ராட்டினத்தின் மையக் கம்பம் பாதியாக உடைந்து தரையில் விழுந்தது.
விபத்திற்குள்ளான ராட்டினத்தில் பயணித்த 40 பேரில் 23 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சம்பவத்தையடுத்து பாதுகாப்புப் படையினரும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், ராட்டினம் பழுதடைந்ததற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தை அடுத்து சவூதி அரேபியாவின் தென்மேற்கு வட்டாரமான டாஇஃப் பகுதியில் உள்ள கேளிக்கைப் பூங்கா மூடப்பட்டுள்ளது.
ராட்டினம் சுழன்று தரையில் விழுந்து நொருங்கும் காணொளி வெளியாகி ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென தரையில் விழுந்து நொருங்கிய ராட்டினம்; 23 பேர் காயம்- சவுதி அரேபியாவில் பயங்கரம் பூங்கா ஒன்றில் 40 பேருடன் சுழன்று கொண்டிருந்த ராட்டினம் திடீரென தரையில் விழுந்து நொருங்கியதில் 23 பேர் காயமடைந்துள்ளனர். இந்த பயங்கர சம்பவம் சவூதி அரேபியாவின் தாயிஃப் அருகே உள்ள ஹடா பகுதியில் உள்ள கிரீன் மவுண்டன் பூங்காவில் கடந்த புதன்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.சவுதி அரேபியாவின் ‘360 டிகிரிஸ்’ என்ற பிரபல ராட்டினம் சுற்றிக்கொண்டிருந்தபோது திடீரென பல மீற்றர் உயரத்திலிருந்து தரையில் விழும் காட்சி காணொளியாக வெளிவந்து அனைவரையும் திகைப்படைய வைத்துள்ளது. ‘360 டிகிரிஸ்’ ராட்டினம் செயல்பாட்டில் இருந்தபோது திடீரென சுழன்றடித்து தரையில் விழுந்து நொருங்கியுள்ளது. ராட்டினம் விபத்திற்குள்ளான போது ராட்டினத்தில் சுமார் 40 பேர் பயணித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பயணிகளுடன் சுழன்று கொண்டிருந்த ராட்டினம் திடீரென வேகம் அதிகரித்து ராட்டினத்தின் மையக் கம்பம் பாதியாக உடைந்து தரையில் விழுந்தது. விபத்திற்குள்ளான ராட்டினத்தில் பயணித்த 40 பேரில் 23 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.சம்பவத்தையடுத்து பாதுகாப்புப் படையினரும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். இதற்கிடையில், ராட்டினம் பழுதடைந்ததற்கான காரணம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.சம்பவத்தை அடுத்து சவூதி அரேபியாவின் தென்மேற்கு வட்டாரமான டாஇஃப் பகுதியில் உள்ள கேளிக்கைப் பூங்கா மூடப்பட்டுள்ளது. ராட்டினம் சுழன்று தரையில் விழுந்து நொருங்கும் காணொளி வெளியாகி ஒரு கணம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.