• Jul 14 2026

யாழ். சிறைச்சாலையின் மேலே 'ட்ரோன்' பறக்க விட்டவர் கைது!

Chithra / Jul 14th 2026, 9:53 am
image


யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே 'ட்ரோன்' பறந்தமையால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பதற்றம் ஏற்பட்டது.


யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத 'ட்ரோன்' ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டது. 'ட்ரோனை' அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.


இதேநேரம் இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு  சிறை பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டது.


இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட 'ட்ரோன்' அது எனக் கண்டறியப்பட்டது.


பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். 


யாழ். சிறைச்சாலையின் மேலே 'ட்ரோன்' பறக்க விட்டவர் கைது யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே 'ட்ரோன்' பறந்தமையால் சிறைச்சாலை நிர்வாகத்திடையே பதற்றம் ஏற்பட்டது.யாழ்ப்பாணம் சிறைச்சாலையின் மேலே நேற்று மாலை 5 மணியளவில் அடையாளம் காணப்படாத 'ட்ரோன்' ஒன்று சில நிமிடங்கள் வட்டமிட்டது. 'ட்ரோனை' அவதானிப்பதற்குள் அது அங்கிருந்து அகன்றதால் பெரும் பரபரப்பு நிலவியது.இதேநேரம் இந்த ட்ரோனை இயக்கியவர்கள் தொடர்பில் கண்டறியுமாறு சிறைச்சாலை நிர்வாகத்தால் உடனடியாக யாழ்ப்பாணம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டதோடு  சிறை பாதுகாப்பும் உஷார் செய்யப்பட்டது.இதன்பின்பு இடம்பெற்ற தேடுதலின்போது வீதி அபிவிருத்தி அதிகார சபையால் அமைக்கப்படும் பாலங்கள் தொடர்பில் கண்காணிப்பதற்காக அனுமதிக்கப்பட்ட 'ட்ரோன்' அது எனக் கண்டறியப்பட்டது.பாலங்களைக் கண்காணிக்க அனுமதி பெறப்பட்டபோதும் சிறைச்சாலையின் மேலால் இயக்கியமைக்காக ட்ரோனை இயக்கியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார். 

Advertisement

Advertisement

Advertisement