• Nov 26 2024

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால் கைது!

Tharun / May 4th 2024, 8:00 pm
image

புத்தளம் நாகவில்லு பகுதியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரட்டுகளைக் கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை இன்று கைது செய்துள்ளனர்.


இவ்வாறு வெளிநாட்டு சிகரட்டுக்களை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக புத்தளம் பிராந்திய போக்குவரத்த பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைக்கு உற்படுத்தப்பட்டபோது சிகரட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.


இதன்போது 4 பண்டல்கள் அடங்கிய 40 பெட்டிகளில் 800 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பட்டப்பட்டுள்ளன. 


இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்தவரென பிராந்திய போக்குவரத்து பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட சிகரட் பெட்டிகளையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

சட்டவிரோத வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால் கைது புத்தளம் நாகவில்லு பகுதியிலிருந்து அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக வெளிநாட்டு சிகரட்டுகளைக் கொண்டு செல்ல முயற்சித்த ஒருவரை இன்று கைது செய்துள்ளனர்.இவ்வாறு வெளிநாட்டு சிகரட்டுக்களை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கொண்டு செல்வதாக புத்தளம் பிராந்திய போக்குவரத்த பொலிஸாருக்குக் கிடைக்கெப்பெற்ற இரகசியத் தகவலுக்கமைய புத்தளம் பாலாவி பகுதியில் வைத்து மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனைக்கு உற்படுத்தப்பட்டபோது சிகரட்டுக்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இதன்போது 4 பண்டல்கள் அடங்கிய 40 பெட்டிகளில் 800 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பட்டப்பட்டுள்ளன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் புத்தளம் தில்லையடி பகுதியைச் சேர்ந்தவரென பிராந்திய போக்குவரத்து பொலிஸார் இதன்போது தெரிவித்தனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் கைப்பற்றப்பட்ட சிகரட் பெட்டிகளையும் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை புத்தளம் பொலிஸார் முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement