• Jul 05 2024

அரச ஊழியராக பணிபுரிந்த ரோபோ எடுத்த விபரீத முடிவு...! சோகத்தில் மூழ்கிய மக்கள்...!நடந்தது என்ன?

Sharmi / Jul 3rd 2024, 11:49 am
image

Advertisement

தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ தற்கொலை செய்து கொண்டதாக தென் கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த ரோபோ நகர சபையின் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த விபத்தை நகரவாசிகள் தற்கொலை என்று கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ரோபோ பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் ரோபோவின் உடல் கிடந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிக்கட்டுகளில் இருந்து கீழே விழும் முன் ரோபோ சுழன்று கீழே விழுந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரோபோ விழுந்ததற்கு முன் ஏதோ தவறு இருப்பது போல் சுற்றித் திரிவதை நேரில் கண்ட சாட்சிகள் பார்த்ததாகவும் சம்பவத்தின் சூழ்நிலையை வெளிக்கொணர விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

இதேவேளை தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.


அரச ஊழியராக பணிபுரிந்த ரோபோ எடுத்த விபரீத முடிவு. சோகத்தில் மூழ்கிய மக்கள்.நடந்தது என்ன தென் கொரியாவில் உள்ள குமி நகர சபையில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ தற்கொலை செய்து கொண்டதாக தென் கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த ரோபோ நகர சபையின் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த விபத்தை நகரவாசிகள் தற்கொலை என்று கூறுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.ரோபோ பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் ரோபோவின் உடல் கிடந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.படிக்கட்டுகளில் இருந்து கீழே விழும் முன் ரோபோ சுழன்று கீழே விழுந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.ரோபோ விழுந்ததற்கு முன் ஏதோ தவறு இருப்பது போல் சுற்றித் திரிவதை நேரில் கண்ட சாட்சிகள் பார்த்ததாகவும் சம்பவத்தின் சூழ்நிலையை வெளிக்கொணர விசாரணை நடந்து வருவதாகவும் அதிகாரியொருவர் தெரிவித்தார்.இதேவேளை தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement