• Nov 26 2024

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு மூளைக் காய்ச்சல்..!!Samugammedia

Tamil nila / Dec 26th 2023, 9:15 pm
image

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மரபணு மாதிரிகளை பரிசோதித்த போது, ​​அவர்களில் ஒருவருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

குறிப்பாக  பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட  நான்கு நோயாளிகளின் மரபணு மாதிரிகள் பரிசோதனைக்காக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.

இதன் போது கைதி ஒருவருக்கு மட்டும் மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மூளை காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள 17 கைதிகள் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் இவர்கள் அனைவரின் மரபணு மாதிரிகளும் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

சிறைக் கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக மாத்தறை சிறைச்சாலையை சுற்றியுள்ள மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என சிறைச்சாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

மாத்தறை சிறைச்சாலையில் கைதி ஒருவருக்கு மூளைக் காய்ச்சல்.Samugammedia மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளின் மரபணு மாதிரிகளை பரிசோதித்த போது, ​​அவர்களில் ஒருவருக்கு மூளைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.குறிப்பாக  பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட  நான்கு நோயாளிகளின் மரபணு மாதிரிகள் பரிசோதனைக்காக பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டதாக சிறைச்சாலை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்துள்ளார்.இதன் போது கைதி ஒருவருக்கு மட்டும் மூளைக் காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.மேலும் மூளை காய்ச்சல் என சந்தேகிக்கப்படும் மாத்தறை சிறைச்சாலையில் உள்ள 17 கைதிகள் தற்போது மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்துடன் இவர்கள் அனைவரின் மரபணு மாதிரிகளும் பொரளை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.சிறைக் கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டு, நுண்ணுயிர் எதிர்ப்பிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.குறிப்பாக மாத்தறை சிறைச்சாலையை சுற்றியுள்ள மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என சிறைச்சாலை வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ரணசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement