• May 03 2024

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி - இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு!

Chithra / Apr 22nd 2024, 3:59 pm
image

Advertisement


வருடாந்தம் தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை இன்று (22) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நிகழும் ஒரு சம்பவமாகும்.

இந்த விண்கல் மழை லிரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் விழும். இது இன்று இரவு அல்லது நாளை காலை உச்சத்தில் இருக்கும். 

இன்று நள்ளிரவுக்குப் பிறகு இதனை பார்வையிடலாம்.

இந்த விண்கல் மழையை காலை 4 - 5 மணிக்குள் வடக்கு திசையில் கண்ணால் பார்க்க முடியும் என விஞ்ஞானி மற்றும் பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று வானில் தோன்றவுள்ள அரிய காட்சி - இலங்கையர்களுக்கு கிடைத்த வாய்ப்பு வருடாந்தம் தோன்றும் முக்கிய விண்கல் மழைகளில் ஒன்றான லிரிட்ஸ் விண்கல் மழை இன்று (22) நள்ளிரவு வடக்கு வானில் தோன்றும் என விண்வெளி விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.இந்த விண்கல் மழை ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 முதல் ஏப்ரல் 29 வரை நிகழும் ஒரு சம்பவமாகும்.இந்த விண்கல் மழை லிரிட்ஸ் என அழைக்கப்படுவதாக விண்வெளி விஞ்ஞானி பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.இந்த விண்கல் மழையில் ஒரு மணி நேரத்திற்கு சுமார் 20 விண்கற்கள் விழும். இது இன்று இரவு அல்லது நாளை காலை உச்சத்தில் இருக்கும். இன்று நள்ளிரவுக்குப் பிறகு இதனை பார்வையிடலாம்.இந்த விண்கல் மழையை காலை 4 - 5 மணிக்குள் வடக்கு திசையில் கண்ணால் பார்க்க முடியும் என விஞ்ஞானி மற்றும் பொறியியலாளர் கிஹான் வீரசேகர தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement