• Dec 06 2024

வீட்டின் ஜன்னலை திறந்துவிட்டு தூங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!

Sharmi / Aug 4th 2024, 11:23 am
image

செவனகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

குடும்பத் தகராறு காரணமாக சில நாட்களாக வீட்டை விட்டு வெளியூர் சென்ற இவர்,  தனது வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டில்சம்பவ தினமன்று இரவு தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று(03) இரவு உணவு அருந்திவிட்டு வீட்டின் ஜன்னலை திறந்து உறங்கிக் கொண்டிருந்த போது, ​​இன்று (04) அதிகாலை திறக்கப்பட்டிருந்த ஜன்னலில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் அவரது கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

குடும்பஸ்தரை கொல்லும் நோக்கில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இலக்கைத் தவறவிட்டதால் துப்பாக்கிச் சூடு தவறாக நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான குடும்பஸ்தர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

வீட்டின் ஜன்னலை திறந்துவிட்டு தூங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி. செவனகல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் 39 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் காயமடைந்துள்ளார்.குடும்பத் தகராறு காரணமாக சில நாட்களாக வீட்டை விட்டு வெளியூர் சென்ற இவர்,  தனது வீட்டிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள வேறு ஒருவருக்குச் சொந்தமான வீட்டில்சம்பவ தினமன்று இரவு தனியாக இருந்துள்ளார்.இந்நிலையில் நேற்று(03) இரவு உணவு அருந்திவிட்டு வீட்டின் ஜன்னலை திறந்து உறங்கிக் கொண்டிருந்த போது, ​​இன்று (04) அதிகாலை திறக்கப்பட்டிருந்த ஜன்னலில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டில் அவரது கை பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.குடும்பஸ்தரை கொல்லும் நோக்கில் குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டாலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவர் இலக்கைத் தவறவிட்டதால் துப்பாக்கிச் சூடு தவறாக நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு உள்ளான குடும்பஸ்தர் எம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement