• Nov 28 2024

சுனாமி பேரலை தொடர்பில் பரவும் தகவல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!!Samugammedia

Tamil nila / Dec 25th 2023, 7:52 am
image

எதிர்வரும் 26ஆம் திகதி சுனாமி ஏற்படக்கூடும் என மக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களம் தெளிவுப்படுத்தியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்படும் நேரத்தையோ திகதியையோ யாராலும் கணிக்க முடியாது என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட்டால் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை உட்பட பல நாடுகளை பாதித்த சுனாமி பௌர்ணமி நாள் அன்றே ஏற்பட்டதாகவும், இதுவோ மக்கள் அச்சம் கொள்வதற்கான காரணம் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும் எதிர்வரும் 26ஆம் திகதி ஓரளவு மழை பெய்யக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


சுனாமி பேரலை தொடர்பில் பரவும் தகவல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள விசேட அறிவிப்புSamugammedia எதிர்வரும் 26ஆம் திகதி சுனாமி ஏற்படக்கூடும் என மக்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என வளிமண்டலவியல் திணைக்களம் தெளிவுப்படுத்தியுள்ளது.வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சுனாமி அல்லது நிலநடுக்கம் ஏற்படும் நேரத்தையோ திகதியையோ யாராலும் கணிக்க முடியாது என அந்த திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.நிலநடுக்கம் அல்லது சுனாமி ஏற்பட்டால் சர்வதேச சுனாமி எச்சரிக்கை மையங்கள் 24 மணி நேரமும் தொடர்ந்து விழிப்புடன் இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.இலங்கை உட்பட பல நாடுகளை பாதித்த சுனாமி பௌர்ணமி நாள் அன்றே ஏற்பட்டதாகவும், இதுவோ மக்கள் அச்சம் கொள்வதற்கான காரணம் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.இருப்பினும் எதிர்வரும் 26ஆம் திகதி ஓரளவு மழை பெய்யக்கூடும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதனால் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement