• May 20 2024

ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் விசேட செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்!samugammedia

Sharmi / Mar 30th 2023, 12:17 pm
image

Advertisement

அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக  முன்னெடுக்கப்படும் செயல் திட்டம் இன்றைய தினம்(30) யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாதசுந்தரம், கௌரவ விருந்தினராக கல்வி கலாச்சார விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் பண்பாட்டலுவல்கள்  அமைச்சின்  செயலாளர் உமாமகேஸ்வரன், வட மாகாண கல்வி பணிப்பாளர்  திரு ஜோன் குயின்டர்ஸ் அவர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.

இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இத்திட்டத்தின் பிரதான நிகழ்வான திறன் வகுப்பறையில் ஆங்கில மொழி மூலமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மேலும், இச் செயற்திட்டமானது நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஆங்கில மொழியை செவிமடுத்தல் மற்றும் உரையாடுதல் மூலமாக ஆங்கில மொழியை மேம்படுத்தும் நோக்கில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் விசேட செயற்றிட்டம் யாழில் ஆரம்பம்samugammedia அகில இலங்கை ரீதியாக ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக  முன்னெடுக்கப்படும் செயல் திட்டம் இன்றைய தினம்(30) யாழ்ப்பாணம் புனித ஜோன் பொஸ்கோ வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சிவபாதசுந்தரம், கௌரவ விருந்தினராக கல்வி கலாச்சார விளையாட்டு, இளைஞர் விவகாரம் மற்றும் பண்பாட்டலுவல்கள்  அமைச்சின்  செயலாளர் உமாமகேஸ்வரன், வட மாகாண கல்வி பணிப்பாளர்  திரு ஜோன் குயின்டர்ஸ் அவர்களும் கலந்து கொண்டு இந்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தனர்.இதன் போது மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இத்திட்டத்தின் பிரதான நிகழ்வான திறன் வகுப்பறையில் ஆங்கில மொழி மூலமான கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.மேலும், இச் செயற்திட்டமானது நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஆங்கில மொழியை செவிமடுத்தல் மற்றும் உரையாடுதல் மூலமாக ஆங்கில மொழியை மேம்படுத்தும் நோக்கில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement