• Aug 03 2025

பாடசாலை பஸ்ஸிற்காக காத்திருந்த மாணவி திடீரென மயக்கி விழுந்து உயிரிழப்பு

Chithra / Aug 2nd 2025, 11:31 am
image


அநுராதபுரம் - கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.

சிகிரியாவின் டல்கோட்டில் வசிக்கும் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும்  11 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ்ஸிற்காக வீதியோரம் காத்திருந்த மாணவி திடீரென சுகயீனமுற்று மயக்கமடைந்துள்ளார். 

மயக்கமடைந்த மாணவியை பாடசாலை குழுவினர் இணைந்து, பாடசாலை பஸ் மூலம் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.   

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவி  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாணவியின் மரணம் குறித்து உடலில் தடயவியல் வைத்திய பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

பாடசாலை பஸ்ஸிற்காக காத்திருந்த மாணவி திடீரென மயக்கி விழுந்து உயிரிழப்பு அநுராதபுரம் - கெக்கிராவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் திடீரென சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்துள்ளதாக கெக்கிராவை பொலிஸார் தெரிவித்தனர்.சிகிரியாவின் டல்கோட்டில் வசிக்கும் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கும்  11 வயதுடைய மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பாடசாலை முடிந்து வீடு திரும்புவதற்காக பஸ்ஸிற்காக வீதியோரம் காத்திருந்த மாணவி திடீரென சுகயீனமுற்று மயக்கமடைந்துள்ளார். மயக்கமடைந்த மாணவியை பாடசாலை குழுவினர் இணைந்து, பாடசாலை பஸ் மூலம் கெக்கிராவை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.   வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் குறித்த மாணவி  உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.மாணவியின் மரணம் குறித்து உடலில் தடயவியல் வைத்திய பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை கெக்கிராவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement